SKIP TO MAIN CONTENT

உடைகிறது இன்னொரு கண்ணாடிக் கூரை - பெண் கிரிக்கட் நடுவர்

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உள்ளூர் அணிகளுக்கான போட்டியில் பெண் ஒருவர் முதல் முறையாக நடுவராகப் பணியாற்றவுள்ளார். ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றில் பெண் நடுவர் (Umpire) களமிறங்குவது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்கு போட்டிக்கு நடுவராக இருந்த கிளாய்ர் போலோசாக் (Claire Polosak), தற்போது ஆஸ்திரேலியா XI, நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதும் ஒருநாள் போட்டிக்கு அம்பயரிங் செய்ய உள்ளார். கிளாய்ர் போலோசாக் இது நாள்வரை எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியது கிடையாது. கிரிக்கட் நடுவர்களுக்கான தேர்வில் பலமுறை தோற்றுள்ள இவர், நீண்ட போராட்டத்துக்குப் பின் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். இதுபற்றி கிளாய்ர் போலோசாக் கூறுகையில், "நான் இதுவரை கிரிக்கெட் விளையாடியதில்லை என்பது உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டுடனான எனது பிணைப்பு தொடர்ந்துவருகிறது. இதில் எனது பெற்றோர்களின் பங்களிப்பும் நிறைய உள்ளது. ஆஸ்திரேலியாவில் இரண்டு வருடம் நடுவர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றேன். மேலும் நிறைய உள்ளூர் போட்டிகளில் மூன்றாவது நடுவராகப் பணியாற்றியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

Claire Polosak
Claire Polosak Source: Claire Polosak

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now