2023 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை La Niña நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது, அதே நேரத்தில் negative Indian Ocean Dipole (IOD) அடுத்த மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு வானிலை நிகழ்வுகளும் கடந்த சில மாதங்களில் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையில் சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவுக்கு பங்களித்தன.
La Niña எப்போது முடிவடைகிறது என்பதைத்தாண்டி, வடக்கு ஆஸ்திரேலியா, தென்கிழக்கு குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு NSW ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது.
எவ்வாறாயினும், மேற்கில் negative Indian Ocean Dipole (IOD) வசந்த காலத்தின் இறுதியில் (அல்லது நவம்பர்) வீழ்ச்சியடையும் என்று ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது.
IOD என்பது வெப்பமண்டல மேற்கு மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலைக்கு இடையே உள்ள வேறுபாடு ஆகும்.
இத்தகைய வானிலை பொதுவாக மே அல்லது ஜூன் மாதத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் உச்சத்தை அடைகிறது, பின்னர் தெற்கு அரைக்கோளத்தில் வசந்த காலத்தின் முடிவில் வேகமாக குறையும்.
புதன்கிழமை பிற்பகல் முதல் Jarrahmond மற்றும் Orbost-க்கு விக்டோரியா மாநில அவசர சேவை (VICSES) பெரும் வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது.
திங்கள்கிழமை பிற்பகலில் இருந்து upper Snowy catchment பகுதிகளில் பெய்த கனமழையின் விளைவாக Snowy மற்றும் Bombala ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
Echucaவில் Murray நதி தற்போது சுமார் 94.9 m AHD இல் உள்ளது. சில நாட்களுக்கு இந்த அளவிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1975 மற்றும் 1993 வெள்ளத்தை விட தற்போதைய வெள்ள அளவு அதிகமாக உள்ளது.
Bunbartha-விற்கு வெளியேற்ற எச்சரிக்கை தொடர்ந்து உள்ளது. திரும்பி வருவது இன்னும் பாதுகாப்பாக இல்லை என்றும், வெள்ளநீருக்குள் நுழைய வேண்டாம் என்றும் குடியிருப்பாளர்களுக்கு VIC SES அறிவுறுத்தியுள்ளது.
"வெள்ளம் நச்சுத்தன்மை வாய்ந்தது. வெள்ளத்தில் விளையாடவோ நீந்தவோ கூடாது" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Goulburn ஆற்றில் மிதமான வெள்ளம் தொடர்வதால் Shepparton குடியிருப்பாளர்கள் பார்த்து செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
"புதன் முதல் வியாழன் வரை ஒரே இரவில் Sheppartonனில் மிதமான வெள்ளம் உருவாகலாம்" என்று VIC SES தெரிவித்துள்ளது.
புதன்கிழமை Walshs பாலத்தில் Broken Creekகில் மிதமான வெள்ளம் தொடர்கிறது.
அடுத்த சில நாட்களுக்கு Nathalia சிறியளவான வெள்ளத்தை அனுபவிக்கும் என்றும், வாரத்தின் பிற்பகுதியில் மிதமான வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் VIC SES கூறியுள்ளது.
வியாழன் அல்லது வெள்ளியன்று உச்சகட்ட வெள்ளம் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், Wharparillaவில் வசிப்பவர்கள் உயரமான நிலங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Appin தெற்கு மற்றும் Kerang, Kialla மேற்கு ஆகிய இடங்களில் Loddon ஆற்றின் குறுக்கே மிதமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
Moreeயில் வசிப்பவர்கள் இப்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என்று NSW SES கூறியுள்ளது. NSW மாநிலம் முழுவதும் வெள்ளத்தை சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
தெற்கு ரிவரினா பகுதியில் உள்ள விவசாய நகரமான Deniliquinக்கு சென்று பார்வையிட்டுள்ள NSW Preimer Dominic Perrottet அப்பகுதியின் இழப்புகள் "இதயத்தை உடைப்பதாக" கூறினார்.
Bombala Caravan Parkஇல் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Dandaloo, Mudall, Nyngan, Mulgawarrina மற்றும் Gongolgon ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு watch and act எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகிய இணையத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணிலும் Victoria Emergency Services-ஐ 1800 226 226 என்ற எண்ணிலும் அழைக்கவும்.
பிற மொழிகளில் இந்தத் தகவலைப்பெற மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்து, VicEmergency Hotline ஐஅழைக்கச் சொல்லுங்கள்.
நீங்கள் காது கேளாதவராகவோ அல்லது பேச்சு/தொடர்புக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், 1800 555 677 என்ற எண்ணில் National Relay சேவையைத் தொடர்புகொண்டு, VicEmergency Hotline ஐ அழைக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.