இருமல், தும்மல், சளி,காய்ச்சல் போன்ற நோய்கள் நம்மை வாட்டிவதைக்கும் காலம் இது.
இவற்றிலிருந்து தப்பிப்பதற்கு வெறுமனே Flu தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டும் போதாது.
நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு வலுவூட்டும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
எப்படியான உணவுகளை உட்கொள்ளலாம்? கீழ்க்காணும் உணவுகளை Nutritionist Anthony Power, ஏபிஸி பிரிஸ்பேர்ன் வானொலி நேர்காணலில் பரிந்துரைத்திருந்தார்.
1. விட்டமின் A மற்றும் Probiotics
உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. குறிப்பாக Yoghurt போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் நல்ல பாக்டீரியா அதிகம் காணப்படுகிறது. பரிந்துரைக்கப்படும் சில உணவுகள்:
- Sauerkraut, kimchi and kombucha
- Organic plain full-fat yoghurt with live bacteria
- Green leafy salads with olive oil and lemon
- Carrots, pumpkin and sweet potato
2. விட்டமின் C உள்ள உணவுகள்
தோடம்பழம் போன்ற விட்டமின் C அதிகம் உள்ள உணவுகள் சளியைத் தடுக்கும் அதேநேரம், அவற்றோடு சேர்த்து கோவா, புரோக்கோலி, பாஸ்லி, மிளகாய், மஞ்சள், கறுவா, உள்ளி போன்றவற்றையும் நமது அன்றாட உணவுடன் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
பரிந்துரைக்கப்படும் உணவு செய்முறை:
- Make chicken soup: Fry onion in butter with oregano, thyme and rosemary before adding a whole chook to a large saucepan and cover with water; simmer for 90 minutes to make a broth
- Blade steak with onions, two cans of tomatoes, garlic and vegetables creates a healthy stew
- Roast cauliflower drizzled in olive oil and herbs
சிலர் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கு விஸ்கி குடிப்பது நல்லது என நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு எனவும் மதுபானம் உடலின் பாதுகாப்புப் பொறிமுறையை திசைதிருப்பிவிடக்கூடும் எனவும் Nutritionist Anthony Power தெரிவித்துள்ளார்.
