FORD நிறுவனத்தின் குறிப்பிட்ட தர வாகனங்களுக்கான பொறியியல் பிரிவு அமெரிக்காவுக்கு மாற்றப்படவுள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தின் விக்டோரிய கிளையில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
FORD நிறுவனம் அண்மையில் Volkswagen நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட ஒப்பந்தத்தை அடுத்து அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
சுமார் 90 வருடங்களுக்கு மேலாக விக்டோரியாவில் தனது வாகனத்தயாரிப்பு வேலைகளை மேற்கொண்டுவரும் FORD நிறுவனம் பெருந்தொகையானவர்களுக்கு வேலை வாய்ப்பளித்துவருவது குறிப்பிடத்தக்கது.
விக்டோரியாவின் Broadmeadows, Lara, Geelong ஆகிய இடங்களிலுள்ள FORD நிறுவன கிளைகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் FORD விக்டோரியாவில் தனது பணித்தளத்தின் 90 ஆண்டு நிறைவை எட்டியது. அப்போது சுமார் ஆறுநூறு பேரளவில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தங்களது விக்டோரிய பணித்தளங்களில் மிகுதிப்பணியாளர்கள் தொடர்ந்தும் பணிபுரிவார்கள் என்று அப்போது FORD உறுதியளித்திருந்தது.
இந்நிலையில் தற்போதைய பணியாளர்கள் எண்ணிக்கை குறைப்பு அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. க
டந்த 2017ஆம் ஆண்டு Holden, Toyota ஆகிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விக்டோரியாவில் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
