இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் அந்தனி அப்பாத்துரை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
சிட்னி விமானநிலையத்தில் சுங்கப்பிரிவு அதிகாரியாக கடமையாற்றிய 73 வயது அப்பாத்துரை, அங்குள்ள Coffee shop-இல் பணிபுரிந்த பெண்ணைக் காதலிப்பதாகக்கூறி, அவருக்கு தொந்தரவு கொடுத்தார் எனவும் அவரை முத்தமிட முயன்றார் எனவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குறித்த பெண் தனக்கு ஏற்கனவே காதலர் இருப்பதாக தெரிவித்தபோது, இவ்விடயம் காதலனுக்கு தெரியத்தேவையில்லை என அப்பாத்துரை கூறியதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அப்பெண்ணின் கைபேசி எண்ணை கட்டாயப்படுத்தி பெற்றுக்கொண்டதாகவும், குறுஞ்செய்தி ஊடாக அப்பாத்துரை தனது காதலை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பணியிடத்தில்வைத்து அப்பெண்ணின் சம்மதமில்லாமல் அவரை முத்தமிட முயன்றதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிமன்றம், அப்பாத்துரையை குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், இவருக்கான தண்டனையாக 12 மாதகால community corrections உத்தரவும் வழங்கப்பட்டது.
அந்தனி அப்பாத்துரை இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்பப்பெயரான Ceylon கிரிக்கட் அணி வீரராக இருந்தவர் என குறிப்பிடப்படுகிறது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
