உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் முதல் 100 இடங்களுக்குள் ஆஸ்திரேலியாவின் 4 பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துள்ளன.
2018-19ம் ஆண்டுக்கான Centre for World University Rankings தரப்படுத்தலிலேயே 4 ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்களும் இடம்பிடித்துள்ளன.
இத்தரப்படுத்தலின்படி University of Melbourne 57வது இடத்தையும் University of Sydney 71வது இடத்தையும் பிடித்துள்ள அதேநேரம் University of Queensland 74வது இடத்தையும் Australian National University 82வது இடத்தையும் பிடித்துள்ளன.
இதேவேளை குறித்த பட்டியலின் முதல் 10 இடங்களில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

