SKIP TO MAIN CONTENT

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒரே வீட்டிலிருந்து 7 பேரின் சடலங்கள் மீட்பு!

Upon arrival the police officers located seven people deceased at the Margaret River property.
Upon arrival the police officers located seven people deceased at the Margaret River property. Source: Google Maps

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

மேற்கு ஆஸ்திரேலியாவின் Margaret River, Osmington பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

4 சிறுவர்கள் மற்றும் 3 பெரியவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 5 மணியளவில் குறித்த வீட்டிற்குச் சென்ற பொலிஸார் 7 பேரின் உடல்களையும் இரு துப்பாக்கிகளையும் மீட்டதாக தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருப்பதால், இவர்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், மரணமடைந்தவர்களின் விபரங்கள் உட்பட மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற எண்ணில் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு Osmington பகுதி பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now