SKIP TO MAIN CONTENT

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல்!

sbs
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் சிக்கிய லேபர் கட்சியின் Justine Keay, Josh Wilson, Susan Lamb ஆகியோர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.

இவ்விவகாரத்தில் சிக்கிய மற்றுமொரு லேபர் கட்சியின் செனட்டர் Katy Gallagher தொடர்ந்தும் செனட்டராக பதவி வகிக்க முடியாதென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதையடுத்து, இம்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

Katy Gallagher 2016 தேர்தலில் போட்டியிடும்போது தனது பிரிட்டிஷ் குடியுரிமையைத் துறந்திருக்கவில்லை என்பதால் அவர் தொடர்ந்தும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தகுதியை இழப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக இரட்டைக்குடியுரிமையுடைய Katy Gallagher பதவி விலக வேண்டுமென ஆளுங்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும், தனது பிரிட்டிஷ் குடியுரிமையைத் துறப்பதற்குத் தேவையான ஆவணங்களை தாம் சமர்ப்பித்திருந்ததாக அவர் வாதிட்டுவந்தநிலையில் நீதிமன்றின் முடிவு இன்று வெளியாகியுள்ளது.

இதையடுத்து இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் சிக்கியுள்ள ஏனைய 3 லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான Justine Keay, Josh Wilson, Susan Lamb ஆகியோர் உடனடியாக தமது பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து இதே சிக்கலை எதிர்கொண்டுள்ள சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் Rebekha Sharkie-உம் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now