SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் வீடொன்றிலிருந்து தாய் மற்றும் 3 பிள்ளைகளின் சடலங்கள் மீட்பு!

A man is speaking with homicide detectives after four people were found dead at a home in Melbourne.
A man is speaking with homicide detectives after four people were found dead at a home in Melbourne. Source: AAP

1 min read

Published


Skip to article content

மெல்பேர்ன் வடமேற்குப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Burgess St, Tullamarine பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்தே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் வாழ்பவர்களுக்கு இதனால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லையெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

42 வயதான பெண்ணும் அவரது 7 வயது, 5 வயது மற்றும் 3 வயதுடைய பிள்ளைகளுமே இவ்வாறு மரணமடைந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்ற அதேநேரம் குறித்த நால்வரின் மரணம் எவ்வாறு சம்பவித்தது என்ற விசாரணை தொடர்வதாக குறிப்பிடப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now