மெல்பேர்னில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சாலைவிபத்தில் 4 பொலிஸார் கொல்லப்பட்டனர்.
Eastern நெடுஞ்சாலையில் Chandler Highway,Kew-க்கு அருகே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் truck ஒன்றும் பல கார்களும் உட்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
Porsche கார் ஒன்று வேகமாக வந்தது தொடர்பாக போலீசார் அந்த வாகன ஓட்டுநருடன் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸார் மீது truck வந்து மோதியதில் அவ்விடத்தில் இருந்த நான்கு பொலிஸார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடைபெற்றவுடன் Porsche காரின் ஓட்டுநர் அங்கிருந்து ஓடிச்சென்றுவிட்டபோதிலும் தற்போது அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய truck ஓட்டுநர் விபத்தில் காயமடையவில்லை என்றும் வேறொரு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.
புதன் பிற்பகல் 5.40 அளவில் இடம்பெற்ற இக்கோர விபத்தில் கொல்லப்பட்டவர்களில் இருவர் senior constables. ஏனைய இருவரும் constables ஆவர்.
கடமையுணர்வும் வீரமும் நிறைந்த இந்த நால்வரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது எனக்கூறியுள்ள விக்டோரிய Premier Daniel Andrews, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணை இடம்பெற்றுவருகிறது.
