கொரோனா காலப்பகுதியில் நாடெங்கிலும் உள்ள கவுன்சில்கள் வழங்கிய free parking-இலவச தரிப்பிட சலுகை படிப்படியாக முடிவுக்கு வரத்தொடங்கியுள்ளது.
சிட்னியில் இன்று திங்கட்கிழமை முதல் வழக்கம்போல வாகனத்தரிப்பிடங்களுக்கான பற்றுச்சீட்டு நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதாகவும், விதிகளை மீறுவோருக்கு தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினை அடுத்து நாடெங்கிலும் அறிவிக்கப்பட்டிருந்த அவசர காலப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் வாகனத்தரிப்பிட கட்டுப்பாடுகள் கவுன்சில்களினால் தளர்த்தப்பட்டிருந்தன.
இந்த இலவச தரிப்பிட சலுகை கடந்த மே 11 ஆம் திகதியுடன் விக்டோரியாவில் நீக்கப்பட்டிருந்தன.
பிறிஸ்பனில் கடந்த மே 18 ஆம் திகதியுடன் இந்த சலுகைகள் நீக்கப்பட்டிருந்தன. ஏனைய மாநிலங்களில் சில நெகிழ்ச்சியான கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ளன.
டார்வினில் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிமுதல் இந்தக்கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளன.
நியூ சவுத் வேல்ஸில் இன்றுமுதல் இலவச வாகனத்தரிப்பிட சலுகைகள் நீக்கப்படுவதாகவும் வாகன ஓட்டுனர்கள் அவதானத்துடன் பழைய நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கோரப்பட்டுள்ளனர். எனினும் அவசர சேவைப்பிரிவு ஊழியர்கள் பலருக்கு வழங்கப்பட்டிருந்த free parking அனுமதிகள் ஜுன் 30ம் திகதி வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
