SKIP TO MAIN CONTENT

NSW பொதுப்போக்குவரத்தில் 12 நாட்கள் இலவசமாக பயணம் செய்யலாம்!

நியூ சவுத் வேல்ஸ் மாநில மக்கள், நாளை 14ம் திகதி முதல் 25ம் திகதிவரையான 12 நாட்களுக்கு பொதுப்போக்குவரத்து சேவைகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

Sydney Central Station,Australia.
Sydney Central Station,Australia Source: Photodisc

2 min read

Published


Skip to article content

பேருந்து, ரயில், Tram மற்றும் Ferry சேவைகள் அனைத்தும் இதற்குள் உட்படுத்தப்படுவதாக மாநில போக்குவரத்து அமைச்சர் David Elliott தெரிவித்தார்.

ஆனால் private ferry சேவை, airport line மற்றும் Point to Point பேருந்து சேவை போன்றவை உட்படுத்தப்படவில்லை.

Rail Tram Bus Union (RBTU)-ஆல் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தநிலையில், அதனை ஈடுசெய்யும்நோக்கில் அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

பயணிகள் வழக்கம்போல தமது Opal அல்லது credit cards  மூலம் touch on செய்யலாம் எனவும், அவர்களது கணக்கிலிருந்து பணம் எதுவும் அறவிடப்படாது எனவும் குறிப்பிடப்படுகிறது.

ஈஸ்டர் விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறைக்காலத்தில் இச்சலுகை வழங்கப்படுவதால், பெருமளவான பயணிகள் இதன்மூலம் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இலவச போக்குவரத்து சலுகையைப் பயன்படுத்தி அதிகளவானோர் சிட்னி நகரத்திற்குச் செல்லக்கூடும் என்பதால், மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் பாரிய நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் குறித்த 12 நாட்களும் அதிகளவானோர் பொதுப்போக்குவத்தைப் பயன்படுத்தக்கூடும் என்பதால், அனைவரும் கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும், முகக்கவசங்களை அணிந்துகொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now