SKIP TO MAIN CONTENT

பதின்மூன்று என்றால் ஏன் பயப்பட வேண்டும்?

மூடநம்பிக்கை உள்ளவர்களுக்கு வெற்றி !!

Last flight of AY666
Last flight of AY666 Source: SBS Tamil

2 min read

Published

By Kulasegaram Sanchayan

Source: AP



Skip to article content

மாதத்தின் 13ம் நாள் வெள்ளிக்கிழமை என்றால் சிலருக்குப் பதட்டம்.... ஏன்?  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தது ஒரு வெள்ளிக்கிழமை, அவரைக் காட்டிக் கொடுத்தவர் 13வது சீடர் யூதாஸ்.  அது போதும் சில மூட நம்பிக்கை உள்ளவர்களுக்கு.  இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி, கதை கட்டி, அந்த நாளில் எந்தவொரு நல்ல காரியமும் செய்ய முடியாதபடி பயமுறுத்தி விடுவார்கள்.  இதில் ஹாலிவூட்டும் சேர்ந்து கொண்டு, Friday the 13th என்று பல பயங்கரத் திரைப்படங்களையும் தயாரித்து மக்களிடையே அந்தப் பீதியைக் கலப்பதில் மிகப் பெரும் பங்களித்துள்ளார்கள்.

 

பல இடங்களில் வீடுகளுக்குப் பதின்மூன்று என்ற இலக்கம் இருக்காது.  அதே போல், அடுக்குமாடி வீடுகளிலோ, ஹோட்டல்களிலோ 12ம் மாடிக்கு அடுத்த மாடி 14ம் மாடி என்று இலக்கமிடப்பட்டிருக்கும்.

 

அது தவிர, 666 என்ற இலக்கம் சாத்தானின் இலக்கம் என்றதொரு நம்பிக்கையும் இருக்கிறது; அத்துடன் நரகத்தின் ஆங்கிலப் பெயர், Hell.

 

எனவே, இந்த சூழ்நிலையை அவதானித்துப் பாருங்கள்.....

 

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் இருந்து, ஃபின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி விமான நிலையத்திற்குப் பறந்து செல்லும் விமானப் பாதையின் இலக்கம் AY666 (சாத்தானின் இலக்கம்?); அது சென்றடையும் விமான நிலையத்தின் மூன்றெழுத்துக் குறியீடு HEL (நரகத்திற்கு ஒரு L குறைவு).

 

11 வருடங்களுக்கு முன் இந்த விமானப் பாதை ஆரம்பிக்கப்பட்டது, இதுவரை மாதத்தின் 13ம் நாள் வெள்ளிக்கிழமை 21 தடவைகள் வந்து போயிருக்கின்றன. எந்த வித ஆபத்தையும் இந்த விமானப் பயணம் எதிர்கொண்டதில்லை.

 

கடந்த வெள்ளிக்கிழமை, மாதத்தின் 13ம் நாள்.  கோபன்ஹேகன் நகரிலிருந்து, ஹெல்சின்கி (HEL) விமான நிலையத்திற்குச் சென்ற AY666, குறித்த நேரத்திற்கு 8 நிமிடங்கள் முன்னதாகவே மாலை 3:47ற்குச் சென்றடைந்திருந்தாலும், அது தான் கடைசி AY666 விமான சேவை என்று Finnair நிறுவனம் அறிவித்துள்ளது.  இனிமேல் அந்தப் பயணம் AY954 என்று அறியப்படும்.

 

இது மூடநம்பிக்கை உள்ளவர்களுக்கு  வெற்றி என்று சொல்லலாமோ?

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now