சுமார் 2 வருடங்களாக சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியா வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த பின்னணியில், அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆஸ்திரேலியா விசா வைத்திருக்கும் அனைத்து சர்வதேச பயணிகளும், பெப்ரவரி 21 முதல் ஆஸ்திரேலியா வரமுடியும் என பிரதமர் Scott Morrison அறிவித்தார்.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலியா எட்டும் மற்றுமொரு முக்கிய மைல்கல் இதுவென பிரதமர் தெரிவித்தார்.
மார்ச் 20 2020 அன்று, சர்வதேச பயணத்தடையை நடைமுறைப்படுத்தியிருந்த ஆஸ்திரேலியா, இதனை கட்டம் கட்டமாக தளர்த்தியிருந்தது.
வெளிநாட்டு மாணவர்கள், working holidaymaker விசா வைத்திருப்பவர்கள், skilled migrants என ஒவ்வொரு பிரிவினருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவந்த ஆஸ்திரேலியா, தற்போது சுற்றுலா பயணிகளுக்கும் பயணக்கட்டுப்பாட்டு தளர்வினை அறிவித்துள்ளது.
இவ்வாறு ஆஸ்திரேலியா வரும் சுற்றுலாப்பயணிகள், முழுமையாக கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டதற்கான சான்றதழை காண்பிக்கவேண்டும். தடுப்பூசி போடுவதிலிருந்து விதிவிலக்கு பெற்றவர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழைக் காண்பிக்கவேண்டும்.
ஆஸ்திரேலியா வரும் சுற்றுலாப்பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு அந்தந்த மாநில மற்றும் பிராந்திய அரசுகளால் தீர்மானிக்கப்படும்.
மேற்கு ஆஸ்திரேலியா தவிர ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநிலங்கள், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையை நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
