SKIP TO MAIN CONTENT

Garlic bread தயாரிப்புகள் மீளப்பெறப்படுகின்றன!

Garlic Bread
Source: Flickr/Charles Haynes CC BY-SA 2.0

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

ஆஸ்திரேலியா முழுவதும் Woolworths, Aldi, Foodworks ,IGA  உள்ளிட்ட பல இடங்களில் விற்கப்படும் 11 வகையான Garlic bread தயாரிப்புகளை மீளப்பெறுவதாக George Weston Foods நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் தமது உற்பத்தி நிறுவனத்திலுள்ள margarine blender இனுள் இரு சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் இருந்தமை அவதானிக்கப்பட்டதையடுத்து தமது தயாரிப்புக்களில் பிளாஸ்டிக் கலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதால் இவை திரும்பப் பெறப்படுவதாக George Weston Foods நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேநேரம் குறித்த நிறுவனத்தின் தயாரிப்புக்களைப் பயன்படுத்தும் Pizza Hut மற்றும் Domino's நிறுவனங்களும் இவற்றை உடனடியாக விற்பனையிலிருந்து நீக்கியுள்ளன.

எனவே கீழ்க்காணும் தயாரிப்புக்கள் எவையேனும் உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் இருந்தால் உடனடியாக அவற்றைத் திரும்பக் கொடுத்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recalled products:

  • LDI Me'n'u Garlic Bread Twin Pack 450g (NSW and QLD)
  • Woolworths Homebrand Garlic Bread 450g
  • FoodWorks Best Buy Twin Pack Garlic Bread 450g (NSW and QLD)
  • Foodland Garlic Bread Twin Pack 450g (SA)
  • IGA Bakers Oven Garlic Bread Minis 4 Pack
  • IGA Bakers Oven Twin Pack Garlic Bread
  • Australian Garlic Bread 11" Catering Single Garlic Bread
  • Australian Garlic Bread Garlic Bread for One x12
  • Australian Garlic Bread Baguette with Garlic x12
  • Australian Garlic Bread 9" Herb Bread
  • Australian Garlic Bread Catering 9" Garlic Bread

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now