SKIP TO MAIN CONTENT

துப்பாக்கியுடன் தோன்றிய நாடாளுமன்ற உறுப்பினரால் அரசுக்கு ஆபத்து!

Nationals கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் George Christensen, Greens கட்சியினரைக் குறிவைப்பது போல் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிழற்படம் காவல்துறை விசாரணை வரை சென்றுள்ளது.

George Christensen
George Christensen Source: Facebook

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர், Nationals கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் George Christensen தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிழற்படம் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று காவல்துறையிடம் புகார் செய்துள்ளார்.  "Stop Adani" என்ற குழுவைச் சேர்ந்த Ben Pennings செய்த முறைப்பாட்டில், சினிமா வசனங்களுடன் துப்பாக்கியைக் காட்டி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களை மிரட்டுவது போல் அவர் வெளியிட்டுள்ள நிழற்படம் ஏற்கனவே இப்படி அச்சுறுத்துபவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது போல் அமைந்துள்ளது என்றும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மிரட்டல்களை எதிர்கொண்டுள்ள தான், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் அப்படி மிரட்டப்படுவது மேலும் அச்சத்தைத் தருகிறது என்றும், இது குறித்து ஆஸ்திரேலிய காவல்துறையிடமும் முறையிடப் போவதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தி கேட்டு, "Dawson தொகுதி உறுப்பினர் George Christensen பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று Greens கட்சி செனட்டர் Sarah Hanson-Young ட்வீட் செய்துள்ளார்.  "வாக்காளர்களுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்முறையைத் தூண்டிவிடுவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஏற்கனவே துணைப் பிரதமர் Barnaby Joyceன் காதல் விவகாரம் Liberal கட்சியினருக்கும் Nationals கட்சியினருக்குமிடையில் சற்று விரிசலை ஏற்படுத்தியுள்ளது போல் காணப்படுவதால், George Christensen வெளியிட்டுள்ள நிழற்படம் அரசுக்கு மேலும் தலைவலியைக் கொடுக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

 

George Christensen under fire for gun photo on Facebook

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now