அமெரிக்காவை மட்டுமல்ல முழு உலகையே உலுப்பிய George Floyd மரணம் தொடர்பிலான வழக்கில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் Derek Chauvin குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு மே 25ம் திகதி மினசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd(46) கள்ளநோட்டு விவகாரம் ஒன்றில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது அவர்களது பிடியில் இறந்தார்.
ஒரு காருக்கு அடியில்வைத்து கைவிலங்கிடப்பட்டிருக்கும் George Floyd-இன் கழுத்தின் மேல் Derek Chauvin தனது முழங்காலை வைத்து அழுத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இதையடுத்து George Floyd கழுத்தின் மீது காலை வைத்து அழுத்தி கொன்றதாக, Derek Chauvin மீது கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.
அதேநேரம் இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் black lives matter என்ற தொனிப்பொருளில் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி அது உலகெங்கும் எதிரொலித்தது.
இந்நிலையில் Derek Chauvin-க்கு எதிரான வழக்கு விசாரணையின் முடிவில், second-degree unintentional murder, third-degree murder, second-degree manslaughter ஆகிய மூன்று பிரிவுகளிலும் அவர் குற்றவாளி என மினசோட்டாவின் Hennepin County courthouse தீர்ப்பளித்துள்ளது.
அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர George Floyd கைதுச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மேலும் மூவர், குறைவான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
