கிருமி கண்டுபிடுப்பான் இயந்திரம் மூலம் பொது மக்கள் தங்கள் கையில் எவ்வளவு கிருமிகள் உள்ளன என்பதனை அவ்வியந்திரத்தில் தங்களின் கையை வைப்பதன் மூலம் இலகுவாக தெரிந்துக்கொள்ளலாம். இதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பலரையும் காய்ச்சலுக்கான தடுப்பூசி
(Flu jab) போட்டு கொள்ள வைப்பதே இதன் நோக்கமாகும்.
கடந்த வருடம் கிட்டத்தட்ட 650 பேர் influenza காய்ச்சலில் மரணம் அடைந்திருந்தனர் ஆகவே இவ்வருடம் இவ்வெண்ணிக்கையினை குறைக்கும் நோக்கில் அரசு இம்முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இவ்வருடம் அரசு தடுப்பூசி திட்டத்திற்காக 22.75 மில்லியன் டாலர்கள் செலவிட உள்ளது அதில் 3.5 மில்லியன் டாலர்கள் இலவச காய்ச்சலுக்கான தடுப்பூசிக்காக
(Flu jab) செலவிட உள்ளது. காய்ச்சலுக்கான தடுப்பூசியை அடுத்த மாதம் ஏப்ரல் முதல் மக்கள் போட்டுக்கொள்ள ஆரம்பிக்கலாம்.
Share
