நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கிட்டத்தட்ட 700 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு நிலைமை 'கட்டுக்கடங்காமல் செல்வதாக' பல்வேறு தரப்புக்களிலிருந்தும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்பின்னணியில் இன்று திங்கள் மதியம் முதல் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் அங்கு மூடப்படுவதாக மாநில Premier Gladys Berejiklian அறிவித்தார்.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் பாடசாலைகள் தொடர்ந்தும் இயங்கும் என்றபோதிலும் பெற்றோர் முடியுமானால் தமது பிள்ளைகளை வீடுகளிலேயே வைத்திருக்குமாறு அவர் ஊக்குவித்துள்ளார்.
மேலும் அரச பள்ளிகளைப்பொறுத்தவரை அங்கு செல்லும் எந்தவொரு மாணவரும் திருப்பி அனுப்பப்படமாட்டார் எனவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார்.
இதேவேளை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், உள்ளக விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு மையங்கள், pubs, clubs, nightclubs, Crown Casino போன்றவை இன்று மதியம் முதல் மூடப்படுகின்றன.
உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு தடை விதிக்கப்படும் அதேநேரம் take-away மற்றும் home delivery விற்பனைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதிநிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்கள், வங்கிகள், பலசரக்கு கடைகள், home delivery, freight மற்றும் logistics உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தொடர்ந்தும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
