SKIP TO MAIN CONTENT

ராமனை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கட் வீரர் Glenn Maxwell

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் Glenn Maxwell தனது காதலி வினி ராமனை திருமணம் செய்து கொள்ளப் போவதை சமூக ஊடகங்களினூடாக அறிவித்துள்ளார்.

Glen Maxwell & Vini Raman
Glen Maxwell & Vini Raman Source: Instagram

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan


Skip to article content

தென்னாபிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணியுடன் அங்கு சென்றிருக்க வேண்டிய Glenn Maxwell, முழங்கையில் காயம் காரணமாக சுற்றுப்பயணத்திலிருந்து விலகியிருந்தார்.  அவருக்கு முழங்கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளார்கள்.

ஆனால் 31 வயதான ஆல் ரவுண்டர் (All rounder) ஆஸ்திரேலியாவில் தான் இருந்தார்.  கடந்த வாரம் அவருடைய காதலி வினி ராமனிடம் திருமணம் செய்யுமாறு கோரினார்.  இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பழகி வரும் வினி ராமனும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை தனது இன்ஸ்டாகிராமைப் பின்தொடரும் 935,000 பேருக்கு, இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை Glenn Maxwell பகிர்ந்து கொண்டார்.

வினி ராமனும் ஒரே மாதிரியான புகைப்படத்தை தனது சமூக ஊடகங்களூடாக வெளியிட்டிருந்தார்.  இவர்கள் செய்தி தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now