உலகில் தற்போது குறைந்தது 25 நாடுகளில் கொரோனாவைரஸ் COVID-19 தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டில் 78 வயதுடைய நபர் ஒருவர் இந்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவர் உயிரிழந்த ஊரையடுத்துள்ள பத்து ஊர்களில் வாழும் பொதுமக்கள் சுமார் ஐம்பதாயிரம் (50,000) பேரும் இந்த பகுதியிலிருந்து வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது என்று இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் இந்த பகுதி முழுவதுமே வெறிச்சோடிக்கிடகிறது.
இதே வெளியில் தென்கொரியா நாட்டில் கொரோனாவைரஸ் COVID-19 தொற்று வேகமாக பரவுவதாக தென்கொரிய அதிகாரிகள் கவலை வெளியிட்டனர். குறிப்பாக, கொரோனாவைரஸ் COVID-19 தொற்று காரணமாக நேற்றும் ஒருவர் உயிர் இழந்தார் என்றும், மேலும் புதிதாக குறைந்தது 150 பேருக்கு கொரோனாவைரஸ் COVID-19 தொற்று கண்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சீனாவைப் பொறுத்தவரை, கொரோனாவைரஸ் COVID-19 தொற்று காண்போரின் எண்ணிக்கை குறையத்துவங்கி இருப்பதாக சீனா கூறியுள்ளது. கொரோனாவைரஸ் COVID-19 தொற்று பரவத் துவங்கிய Hubei பிராந்தியத்தில் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் துவங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். சீனாவில் சுமார் 76,000 பேருக்கு கொரோனாவைரஸ் COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் இந்த தொற்று காரணமாக குறைந்தது 2,345 பேர் உயிர் இழந்துள்ளனர் என்றும் சீனா கூறியுள்ளது.
