ஆஸ்திரேலியாவையே ஒரு நிமிடம் நிறுத்திவைக்கும் போட்டி என வர்ணிக்கப்படும், மெல்பன் கப் குதிரைப்பந்தயப் போட்டியில் French குதிரையான Gold Trip வெற்றி பெற்றது.
Gold Trip-இன் வெற்றியானது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இக்குதிரையை ஓட்டிச்சென்ற Mark Zahra தெரிவித்தார்.
அதேநேரம் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என குதிரையின் பயிற்றுவிப்பாளர்களான Ciaron Maher மற்றும் David Eustance குறிப்பிட்டனர்.
இரண்டாம் இடத்தை Emissary பெற்றுக்கொண்ட அதேநேரம் High Emocean என்ற குதிரை மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
மூன்றாம் இடத்தைப் பெற்ற குதிரையும் Ciaron Maher மற்றும் David Eustance ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.
பலரது விருப்பத்தெரிவாக காணப்பட்ட Deauville Legend என்ற குதிரை நான்காம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இவ்வருட மெல்பன் கப்புக்கான வெற்றித்தொகை சுமார் 8 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
