SKIP TO MAIN CONTENT

சிட்னியில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒரு நற்செய்தி

eToll Deposit என்ற முறையை NSW அரசு படிப்படியாக அகற்றுவதால், $60 மில்லியனுக்கும் அதிகமான பணம் சிட்னி வாகன ஓட்டிகளுக்குத் திருப்பிக் கொடுக்கப்படுகிறது.

(SYD312) Sydney. 20th June, 2000. GST stock pictures. Toll booths on the Harbour Bridge will also attract GST. (AAP PHOTO/Dean Lewins).
(SYD312) Sydney. 20th June, 2000. GST stock pictures. Toll booths on the Harbour Bridge will also attract GST. (AAP PHOTO/Dean Lewins). Source: DIG

1 min read

Published

By Kulasegaram Sanchayan


Skip to article content

சிட்னியில் வாகனம் ஓட்டுபவர்களில் அனேகம் பேர் சில நெடுஞ்சாலைகளில் பயணிக்க, Toll என்றழைக்கப்படும் தீர்வைப் பணம் கட்டுவதற்குப் பழக்கப்பட்டு விட்டார்கள்.  முன்னர் இந்த நெடுஞ்சாலைகளில் இதற்கென்று ஆட்களைப் பணிக்கமர்த்தி அந்தக் கட்டணம் ஓட்டுனர்களிடமிருந்து பெறப்பட்டது.  பின்னர் தேவையான பணத்தை இதற்காக அமைக்கப்பட்டிருந்த இயந்திரங்களுக்குள் செலுத்தி விட்டு ஓட்டுனர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.  தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக, இந்த சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் வேகத்தைக் குறைக்காமலே பணத்தை அறவிட்டுக் கொள்ளும் வகையில் eTag என்ற இலத்திரனியல் கருவிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டு, தீர்வைப் பணம் நேரடியாக ஓட்டுனரின் கணக்கிலிருந்து அறவிடப்பட்டது.

Supplied photo of Roads Minister Michael Daley presenting an RTA electronic toll tag to the last driver to pay for his toll in cash on the Sydney Harbour Bridge, Sunday, Jan. 11, 2009. After more than 75 years, cash toll boothes on the bridge were closed
After 75+ years, cash toll booths on the Sydney Harbour Bridge were closed on Sunday, Jan. 11, 2009, with commuters now paying tolls via an electronic tag. Source: NSW Government

இந்த eTag முறை வாகன ஓட்டுநர்களுக்கு சௌகரியமாக இருந்தாலும், அதனைப் பெறுவதற்கு ஓட்டுநர்கள் $ 40 வைப்புத் தொகை (deposit) கட்ட வேண்டி இருந்தது.  இந்தத் தொகை மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படுகிறது என்று NSW அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், புதிதாக eTag பெறுபவர்கள் இந்த வைப்புத் தொகை செலுத்த வேண்டியதில்லை.

View of Sydney Harbour Bridge
Rush hour traffic on Sydney Harbour Bridge. (Photo by Dimitri Iundt/Corbis/VCG via Getty Images) Source: Sygma

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now