பயணிகளை ஏமாற்றி கூடுதல் பணம் வசூலிக்கும் நோக்கத்துடன் தூர வீதிகளால் பயணம் செய்ய முற்படும் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் Google Maps செயலியின் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Google Maps செயலியில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த தொழில்நுட்பத்தில், வாடகை கார் ஓட்டுனர் குறுகிய பாதை வழியாக பயணிகளை கொண்டு செல்லாமல் கூடுதல் பணம் வசூலிக்கும் நோக்கத்துடன் தூர வீதிகளால் செல்ல முற்பட்டால் 500 மீற்றர்கள் மீறினால் பயணிகளுக்கு உடனடியாக எச்சரிக்கை தகவல் கொடுக்கும். இந்த தொழில்நுட்பத்தின் கீழ் பயணிகளின் பயணமும் பணமும் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Google Maps செயலி அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய தொழில்நுட்பம் இப்போதைக்கு இந்தியாவில் பரீட்சார்த்த முயற்சியில் உள்ளது என்றும் ஆஸ்திரேலியாவுக்கு அறிமுகமாவதற்கு காலமெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Google Maps கடந்த 2013 ஆம் ஆண்டு போக்குவரத்துக்கள் தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய புதிய செயலியை (Waze) கொள்முதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share
