SKIP TO MAIN CONTENT

விக்டோரியாவிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் $50 பரிசுத்திட்டம் ஆரம்பம்!

How Victorians can claim a $250 bill busting bonus from 01 July
How Victorians can claim a $250 bill busting bonus from 01 July Source: Getty Images

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

விக்டோரியா மாநிலத்தில், Energy Compare இணையத்தளத்துக்கு செல்பவர்களுக்கு, ஐம்பது டொலர்களை வழங்கும் அம்மாநில அரசின் திட்டம் இம்மாதம் முதல் ஆரம்பமாகிறது.

வீட்டு மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாடுகளை இணையத்தளத்தின் (https://compare.switchon.vic.gov.au) ஊடாக ஒப்பீடு செய்துகொள்ளும் முறையை, பயனாளர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் முகமாக விக்டோரிய அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன்படி, Energy Compare இணையத்தளத்துக்கு செல்பவர்களுக்கு, ஐம்பது டொலர்களை மாநில அரசு வழங்கவுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிவாயு பாவனையாளர்களின் தவணை கட்டண பற்றுச்சீட்டில், இந்த 50 டொலர் பணம் விலக்களிக்கப்படுவதன் மூலம், இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

விக்டோரிய மாநில தேர்தல் நெருங்கிவருகின்ற வேளையில், premier Daniel Andrews அறிவித்துள்ள இந்த திட்டத்தை கடுமையாக சாடியுள்ள எதிர்க்கட்சியினர், வரவிருக்கும் தேர்தலில் வாக்குகளை வேட்டையாடுவதற்காக Andrews அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற அப்பட்டமான கையூட்டுமுறை இது என்று கூறியுள்ளனர்.

ஜூலை மாதத்திற்கும் டிசெம்பர் மாதத்திற்கும் இடையில் இவ்வாறு Energy Compare இணையத்தளத்தை உபயோகப்படுத்தி தங்களது மின்சாரம் மற்றும் எரிவாயு பாவனையை ஒப்பீடு செய்துகொள்பவர்களுக்கு இந்த 50 டொலர் சன்மானம் வழங்கப்படுகிறது.

விக்டோரிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய இனாம் வழங்கும் திட்டத்திற்காக 48 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now