SKIP TO MAIN CONTENT

வீட்டுக்கு வரும் மருத்துவரின் சேவை (GP) கட்டுப்படுத்தப்படுகிறது!

GP checking a patient's blood pressure.
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

அரசு முன்மொழிந்துள்ள நிதிசேமிப்பு திட்டமிடலின் கீழ், நமது வீடுகளுக்கு மருத்துவரை அழைத்து சிகிச்சை பெறுவது கடினமாக்கப்படவுள்ளது.

ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்படும் அரசின் நிதி சேமிப்பு திட்டமிடலின்படி, வீடுகளுக்கு மருத்துவர்களை அழைத்து சிகிச்சைபெறும்  after-hours care at home-க்காக நாம் மருத்துவரை முன்கூட்டியே பதிவுசெய்ய அழைக்கும்போது, உண்மையிலேயே அவர் அங்கு செல்ல வேண்டுமா என்பதை தகுதிவாய்ந்த GP ஒருவர் ஆராய்ந்து பார்த்து, அனுமதி வழங்கினால் மட்டுமே குறித்த மருத்துவர் அவ்வீட்டுக்குச் செல்ல முடியும்.

இதன் காரணமாக Trainee மற்றும் Junior மருத்துவர்களின் வருமானம் சற்றுக் குறையவுள்ளது. ஆனால் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தொடர்ந்தும் மெடிகெயார் ஊடாக அதிகூடிய தொகையைப் பெறுவர்.

அரசின் இப்புதிய மாற்றத்தினை ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் வரவேற்றுள்ள போதிலும் வெளியில் நடமாடமுடியாத நிலையில் இருப்பவர்களை இம்மாற்றம் பாதிக்கக்கூடுமென Carers Australia எச்சரித்துள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now