SKIP TO MAIN CONTENT

சென்டர்லிங்க் தொலைபேசி அழைப்புக்கான காத்திருப்பு நேரம் குறைகிறது!

Centrelink Image
Source: Google

1 min read

Published

Presented by Renuka



Skip to article content

சென்டர் லிங்குக்கு அழைப்பெடுப்பவர்கள் மிக நீண்டநேரம் அழைப்பில் காத்திருக்க வேண்டியுள்ளது என்ற குற்றச்சாட்டு தொடரும் நிலையில், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை Human Services   அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இதன்படி சென்டர்லிங்குக்கு வரும் அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கென, மேலதிகமாக ஆயிரம் பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படவுள்ளதாக Human Services  அமைச்சர் Michael Keenan  தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களால் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கமர்த்தப்படும் ஆயிரம் பேரும் ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு இயங்குவார்கள் என குறிப்பிடப்படுகிறது.

அரச கொடுப்பனவு பெறுபவர்களிடமிருந்து, ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு மில்லியன் தொலைபேசி அழைப்புக்கள் சென்டர்லிங்குக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now