ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது

ஆஸ்திரேலியாவிற்குள் skilled migrants-திறமை அடிப்படையில் உள்வாங்கப்படுபவர்களின் எண்ணிக்கையை 35 ஆயிரங்களால் அதிகரிப்பதாக லேபர் அரசு தெரிவித்துள்ளது.

Australian Visa and Passport

Australian Visa and Passport Credit: Visa Reporter

தற்போது ஆண்டொன்றுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 160,000 ஆக காணப்படும் நிலையில், இதனை 195,000-ஆக அதிகரிப்பதாக உள்துறை அமைச்சர் Clare O'Neil தெரிவித்தார்.

இன்று இரண்டாவது நாளாக இடம்பெறும் Jobs and Skills Summit-இல் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதுள்ள நடைமுறையின்படி வருடந்தோறும் நிரந்தரமாக குடிபெயர அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் 70 வீதமான இடங்களை skilled migrants-க்கு அரசு ஒதுக்குகிறது.

அந்தவகையில் அதிக எண்ணிக்கையிலான IT வல்லுனர்கள், தாதியர், முதியோர் நலத்துறை ஊழியர்கள் உட்பட பல தொழிலளர்கள் ஆஸ்திரேலியாவிற்கு திறமை அடிப்படையில் நிரந்தரமாக குடியேற வழியேற்படும்.

இதேவேளை விசா விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துவிட்டு அதற்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் காத்திருப்பு காலமும் மிகவும் அதிகமாக காணப்படும் நிலையில், இந்நெருக்கடியைத் தீர்க்கும்வகையில் மேலதிகமாக 500 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென சுமார் 36.1 மில்லியன் டொலர்களை லேபர் அரசு ஒதுக்குவதாகவும், மேலதிக பணியாளர்களின் உதவியுடன் விசாவிற்கான காத்திருப்பு காலப்பகுதியை விரைவில் குறைக்கமுடியுமென நம்புவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

விசா வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதன்மூலம் skilled workers, மாணவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என அதிகமான மக்கள் ஆஸ்திரேலியா வந்து பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கலாம் என்பதுடன். தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய உதவலாம் என அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

புள்ளிவிவரவியல் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவில் தற்போது 480,100 தொழில் வெற்றிடங்கள் உள்ளன. கடந்த 2020 பெப்ரவரியுடன் ஒப்பிடும்போது இது 111.1 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
—————————————————————————————-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
——————————————————————————————

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

Share

Published

Updated

Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand