The Australian இன்று வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி ஆளும் கூட்டணி அரசு, இருகட்சி விருப்பு அடிப்படையில் எதிர்கட்சியான லேபர்கட்சியை விடவும் 51 க்கு 49 என முன்னிலை வகிக்கிறது.
மேலும் கூட்டணி அரசின் முதன்மை வாக்குகள் 41 வீதமாக மாறாமல் காணப்படும் அதேநேரம் லேபர் கட்சியின் முதன்மை வாக்குகள் 33 வீதமாக காணப்படுகின்றன.
மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக Scott Morrison அவர்கள் எதிர்கட்சித் தலைவர் Anthony Albanese-ஐ விடவும் 46-35 என தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றார்.
கருத்துக்கணிப்புக்கள் அனைத்துக்கும் மாறாக கடந்த தேர்தல் முடிவு அமைந்திருந்த பின்னணியில் தற்போது இக்கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்படும் முறை மேம்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
