விக்டோரியாவின் அதிசயங்களில் ஒன்றான Twelve Apostles பகுதியை பார்வையிடுவதற்கு சென்றுகொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனம் Great Ocean பெருந்தெருவின் ஓரத்திலிருந்த மரத்துடன் மோதியதில் அதில் பயணம் செய்தவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் பயணம் செய்த 69 வயது சீன மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏனைய பயணிகள் Geelong வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக பொலீஸார் தெரிவித்தபோது - பதினாறு பேர் பயணம் செய்த இந்த வாகனம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து அவசர சேவைகளுக்கு அழைப்பெடுக்கப்பட்டபோது படுகாயமடைந்த மூதாட்டி ஹெலிக்கொப்டர் மூலம் மெல்பேர்ன் வைத்தியசாலைக்கு கொண்டுசென்று சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் இவ்விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.
