'உலகின் மிக அழகான சாலை' என்ற பெருமையை விக்டோரியாவின் Great Ocean Road ஆய்வு ஒன்றில் பெற்றுள்ளது.
உலகெங்குமுள்ள Instagram பாவனையாளர்கள் hashtag-உடன் பதிவிட்ட புகைப்படங்களின் அடிப்படையில் Pentagon Motor Group மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
விக்டோரியாவின் Torquay இலிருந்து Allansford வரை 243 கிலோமீட்டர்களுக்கு நீண்டிருக்கும் Great Ocean Road உலகின் மிக நீண்ட போர் நினைவுச் சின்னமாகும்.
முதல் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அந்தப் போரில் உயிர்பிழைத்த வீரர்களால் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
இதேவேளை குறித்த ஆய்வில் Great Ocean Road உட்பட முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள சாலைகளின் விவரங்கள் வருமாறு:
1. The Great Ocean Road - VIC, Australia
2. Big Sur - California, USA
3. Jebel Hafeet - Al Ain, UAE
4. Hai Van Pass - Vietnam
5. Chapman's Peak Drive - South Africa
6. Blue Ridge Parkway - USA
7. Going-To-The-Sun Road - Montana, USA
8. Wild Atlantic Way - Ireland
9. Olympic Peninsula Loop - Washington, USA
10. Icefields Parkway - Canada
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
