காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு போராட்டம் செய்யும் பாடசாலை மாணவர்களுக்கு ஆதரவு வழங்கவென Greta Thunberg இங்கிலாந்து சென்றுள்ளார். 22 வயதான Malala Yousafzai, ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டதாரி மாணவர்.
அமைதிக்கான நோபல் பரிசை 2014 ஆம் ஆண்டில் வென்ற Malala Yousafzai, நோபல் பரிசு வென்றவர்களில் மிகவும் இளமையானவர் என்ற பட்டத்தையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். இரண்டு இளம் ஆர்வலர்களின் படத்தையும் ட்விட்டரில் வெளியிட்ட அவர், "Thunberg ற்கு நன்றி” ஏறி கூறியுள்ளார்.
"நான் இந்த ஒரு நண்பருக்காக மட்டுமே பாடசாலை செல்வதை தவிர்ப்பேன்" என்று அவர் ட்விட்டரில் மேலும் கூறியுள்ளார்.
Malala Yousafzai தனக்கு "முன்மாதிரி" என்று Greta Thunberg தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் மற்றும் பெண்கள் கல்வி போன்ற முக்கிய உலகளாவிய பிரச்சினைகளுக்குப் பிரச்சாரம் செய்துவரும் இந்த இரு இளம் பெண்களும் தற்போது பிரபலமாகியிருக்கிறார்கள்.
ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினார் Greta Thunberg. உலகெங்கிலும் உள்ள காலநிலை பேரணிகளை ஊக்குவித்தது மட்டுமன்றி, மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை ஆரம்பித்தார் Greta Thunberg.
பாக்கிஸ்தானில் பெண் சிறுமிகள் பாடசாலை செல்வதற்கான உரிமையை ஆதரித்ததற்காக, 15 வயதாக இருந்தபோது, தலிபான் படையினால் தலையிலும் கழுத்திலும் சுடப்பட்டார் Malala Yousafzai.
அவரது காயங்களிலிருந்து மீண்ட பிறகு, Malala Yousafzaiயும் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தனர். பெண்களுக்குக் கல்வி வசதி வேண்டும் என்ற விடயத்தை அவர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார். 17 வயதிலேயே அவர் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இதே பரிசுக்கு Greta Thunberg பரிந்துரைக்கப்பட்டார்.
இவர்களிருவரும் Malala Yousafzai வசிக்கும் ஆக்ஸ்போர்டு கல்லூரியில், Lady Margaret Hallலில் சந்தித்தார்கள். அவர்கள் என்ன விவாதித்தார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை என்றாலும், “அறிவியல், வாக்களிப்பு முறைகள், எதிர்ப்பின் வரம்புகள், உமிழ்வைப் பொறுத்தவரை உண்மையான பூஜ்ஜியம் மற்றும் நிகர பூஜ்ஜியம்" என்பன குறித்தும், வேறு பல விடயங்களும் பேசினார்கள் என்று கல்லூரியின் முதல்வர் Alan Rusbridger மாணவர்களிடம் கூறியுள்ளார்.