SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவுக்குள் பறக்க அரைவாசி விலையில் விமானப்பயணச்சீட்டுகள்!

Qantas plane
Qantas Airways Limited is the flag carrier of Australia Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியர்கள் உள்நாட்டுக்குள்ளேயே சுற்றுலா செல்வதை ஊக்குவிக்கும்வகையில் விமானப்பயணச்சீட்டுகளை மலிவுவிலையில் விற்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

இதன்படி சுமார் 8 லட்சம் உள்ளூர் விமானப்பயணச்சீட்டுகள் அரைவாசி விலையில் விற்கப்படவுள்ளன.

இத்திட்டத்திற்கென 1.2 பில்லியன் டொலர்களை அரசு செலவிடவுள்ளது.

ஏப்ரல் - ஜுலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவின் 13 பகுதிகளுக்கான விமானப்போக்குவரத்துக்குரிய விமானப்பயணச்சீட்டுகள் இவ்வாறு 50 வீத விலைக்கழிவில் விற்பனை செய்யப்படவுள்ளன.

குறிப்பாக Gold Coast, Cairns, Whitsundays region, Sunshine Coast, Uluru, Alice Springs, Launceston, Devonport, Burnie, Broome, Avalon, Merimbula, Kangaroo Island போன்ற பகுதிகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளன.

Qantas, Virgin,  Jetstar போன்ற விமான நிறுவனங்களின் இணையத்தளங்கள் ஊடாக எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதியிலிருந்து வாரத்திற்கு 46 ஆயிரம் விமானப்பயணச்சீட்டுகள் என்ற அடிப்படையில் இவை விற்பனை செய்யப்படவுள்ளன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now