SKIP TO MAIN CONTENT

மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் ஆஸ்திரேலியா, இந்தியா இலங்கை எத்தனையாவது இடம்?

Sydney harbour
Source: AAP Image/Vivid LIVE/Daniel Boud

1 min read

Published

Updated


Skip to article content

உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு 11-ஆவது இடம் கிடைத்துள்ளது.

பின்லாந்து நான்காவது தடவையாக தொடர்ந்தும் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் டென்மார்க்கும் மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்தும் உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் தயாரிக்கப்படும் இந்தபட்டியலுக்கு உலக நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி, நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் மற்றும் ஊழலற்ற அரசாட்சி போன்ற விடயங்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்படும் பின்னணயில்,  கொரோனா வைரஸால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்றை தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் எவ்வாறு போராடினார்கள் என்பது குறித்த மதிப்பீடும் இம்முறை சேர்த்துக்காள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

உலக மகிழ்ச்சி நாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான இவ்வறிக்கையின்படி முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள நாடுகள்:

1. Finland (7.842)

2. Denmark (7.620)

3. Switzerland (7.571)

4. Iceland (7.554)

5. Netherlands (7.464)

6. Norway (7.392)

7. Sweden (7.363)

8. Luxembourg (7.324)*

9. New Zealand (7.277)

10. Austria (7.268)

11. Australia (7.183)

12. Israel (7.157)

13. Germany (7.155)

14. Canada (7.103)

15. Ireland (7.085)

16. Costa Rica (7.069)*

17. United Kingdom (7.064)

18. Czech Republic (6.965)

19. United States (6.951)

20. Belgium (6.834)

இந்தப் பட்டியலில் இலங்கை 129-ஆவது இடத்திலும், இந்தியா 139-ஆவது இடத்திலும் சிங்கப்பூர் 32-ஆவது இடத்திலும் மலேசியா  81-ஆவது இடத்திலும் உள்ளன.

ஆகக்கடைசியில் 149 ஆவது நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது.  ஸிம்பாவே 148 ஆவது இடத்திலும்  ருவாண்டா 147 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now