உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க, 2022 வரை அவ்வப்போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியநிலை ஏற்படும் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Harvard T.H. Chan School of Public Health நடத்திய ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை ஒழிக்க முறையான சிகிச்சை மற்றும் மருந்து ஆகியவை இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஒரு முறை மட்டும் சமூகம் முடக்கப்படுவதால் இப்பரவல் நின்றுவிடாது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சாதாரண சளிக்காய்ச்சல் போல கொரோனா வைரஸ் பருவ மாற்றங்களுக்கேற்ப மக்களைப் பாதிக்கும் எனக்கருதும் ஆய்வாளர்கள், சமூக இடைவெளி ஒன்றே வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தற்போதையதீர்வு எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் இவ்வைரஸால் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள பின்னணியில், இதனை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகள் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவது பற்றிப் பரிசீலித்துவருகின்றன.
ஆனால் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு மீண்டும் இரண்டாவது அலை வீசத்தொடங்கும் அபாயம் இருப்பதால் சமூக இடைவெளியை அவ்வப்போது கட்டாயமாக்குவது அவசியப்படலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளையில் அளவுக்கு அதிகமான சமூக இடைவெளி நடவடிக்கைகளால் கிருமியை எதிர்க்கும் சக்தி உடலில் ஏற்படாமல் போய்விடக்கூடும் என்றும் எச்சரித்துள்ள ஆய்வாளர்கள், தங்களது ஆய்வு முடிவு அறுதியான ஒன்றல்ல எனவும் கூறியுள்ளனர்.
Share
