SKIP TO MAIN CONTENT

உணவு பொருட்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை எவை?

நாம் பைகளில் அடைத்த உணவு பொருட்களை வாங்கும் போது விலைகளை ஒப்பிட்டு பார்ப்பதுடன் அதில் உள்ள ஆரோக்கியத் தகவல்களையும் பார்க்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Health Star Rating
Source: healthstarrating.gov.au

2 min read

Published

Updated


Skip to article content

விலைகளை ஒப்பிட்டு பார்ப்பதுடன் குறிப்பாக உணவு பைகளுக்கு பின்னாலுள்ள ஊட்டச்சத்து பட்டியலில் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார் சிட்னியில் வசிக்கும் உணவுமுறை நிபுணர் பிரியா ஐயர்.

நாம் வாங்கும் உணவு பொருளில் மாவுசத்து, கொழுப்புசத்து, உப்பு போன்றவை எவ்வளவு இருக்கிறது என்பதை உணவு பைகளுக்கு பின்னாலுள்ள ஊட்டச்சத்து பட்டியலை பார்ப்பதன் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால் அதனைவிட மிகவும் சுலபமான வழிமுறையில் நாம் வாங்கும் உணவு பொருள் ஆரோக்கியமானதா என்பதனை அந்த உணவு பொருள் பையில் அச்சிடப்பட்டுள்ள Health Star Rating-ஐ பார்த்து தெரிந்துகொள்ளலாம். Star அதிகமாக இருந்தால் ஆரோக்கியமானது என்றும் Star குறைவாக இருந்தால் அது ஆரோக்கியமற்றது என்றும் கூறுகிறார் உணவுமுறை நிபுணர் பிரியா ஐயர்.

உணவு பொருட்களுக்கான Health Star Rating-ஐ யார் வழங்குகிறார்கள் என்று நமக்கு தோன்றும் இல்லையா - இந்த உணவு பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் Health Star Calculatorயை பயன்படுத்தி Health Star Ratingயை கணக்கிட்டு உணவு பொருட்களின் பைகளில் அச்சிடுகின்றன.  ஆஸ்திரேலியாவில் தற்போது Health Star Rating அச்சிடவேண்டும் என்பது கட்டாயமில்லை பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் விரும்பினால் Health Star Ratingயை அச்சிட்டுக்கொள்ளலாம்.

Health Star Rating-ஐ பயன்படுத்தி ஒரு நிறுவனத்தின் உணவு பொருளை இலகுவாக வேறொரு நிறுவனம் தயாரித்துள்ள அதே உணவு பொருளோடு ஒப்பிட்டு எது ஆரோக்கியமானது என தெரிவு செய்து வாங்கலாம்.  ஆனால் ஒவ்வொன்றாக ஒப்பிட்டு பார்த்து வாங்குவதற்கு எங்கே நேரம் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் வழி உள்ளது என்கிறார் உணவுமுறை நிபுணர் பிரியா ஐயர் .  உங்களின் Smartphoneல் FoodSwitch App-ஐ இலவசமாக தரவிறக்கம் செய்து அதனை கொண்டு ஒரு நிறுவனத்தின் உணவு பொருளின் பட்டியலை scan செய்தால் அது மற்றைய நிறுவனங்கள் தயாரிக்கும் அதே உணவு பொருளோடு ஒப்பிட்டு உங்களுக்கு காண்பிக்கும்.  இதன் மூலம் நீங்கள் இலகுவாக ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிவு செய்து வாங்கலாம் என்று கூறுகிறார் பிரியா ஐயர். 

உணவுமுறை நிபுணர் பிரியா ஐயர் SBS தமிழுக்கு வழங்கிய செவ்வியை பின்வரும் இணைப்பில் கேட்கலாம்:

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now