ஆஸ்திரேலிய மருந்தகங்களிலிருந்து 55 இருமல் மற்றும் Flu மருந்துகள் திரும்பப் பெறப்பட்டன!

கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமைகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தின் காரணமாக பல இருமல் மருந்துகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.

The entrance of a chemist in Sydney

Patients are being advised to stop containing the 55 recalled cough and flu medicine products that are sold in pharmacies over the counter. Source: Supplied Source: AAP / Flavio Brancaleone

Key Points
  • பாதுகாப்புக் காரணங்களால் இருமல் மற்றும் flu மருந்துகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
  • சுமார் 55 தயாரிப்புகள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக TGA கூறுகிறது.
  • வறட்டு இருமலுக்கு சிகிச்சையளிக்க பாதுகாப்பான மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளுமாறு நோயாளிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஆஸ்திரேலிய மருந்தகங்களில் இருந்து pholcodine கொண்ட இருமல் மருந்துகள் திரும்பப் பெறப்படுகின்றன.

சிகிச்சைப் பொருட்களுக்கான ஆஸ்திரேலியப் பதிவேட்டில் இருந்து 55 தயாரிப்புகளை ரத்து செய்த Therapeutic Goods Administration, அவற்றைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளது.

சில்லறை விற்பனையாளர்கள் தம்மிடமுள்ள குறித்த மருந்துகளை விற்பனையிலிருந்து அகற்றி, பணத்தைத் திரும்பப் பெற மொத்த விற்பனையாளரைத் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

வறட்டு இருமலுக்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் syrupகள் மற்றும் lozengeகள் உட்பட பலவகையான over-the-counter மூலம் பெறக்கூடிய தயாரிப்புகளில் pholcodine பயன்படுத்தப்படுகிறது. சளி மற்றும் flu அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கும் தயாரிப்புகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

திரும்பப்பெறப்பட்ட தயாரிப்புகளின் பட்டியலில் Pharmacy Action Dry Cough Relief மற்றும் Siolvon Pholcodine Dry Forte போன்ற இருமல் syrupகளும் அடங்கும்.

குறிப்பாக பலரும் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் பின்வரும் தயாரிப்புகள் இப்பட்டியலில் அடங்குகின்றன.
  1. Amcal dry cough oral liquid bottle
  2. Apohealth dry tickly cough relief oral liquid bottle (1-4mg/mL of pholcodine)
  3. Benadryl dry, tickly cough forte oral liquid bottle (4mg/mL of pholcodine)
  4. Blooms The Chemist dry cough relief and nasal decongestant oral liquid bottle
  5. Chemists' Own dry cough range of products oral liquid bottle (1-4mg/mL of pholcodine)
  6. Duro-Tuss dry cough and lozenge products
  7. Difflam plus dry cough lozenges
  8. Pharmacy Choice dry cough relief oral liquid bottle (5mg/mL of pholcodine)
  9. Priceline Pharmacy dry cough relief oral liquid bottle
  10. Soul Pattinson dry tickly cough medicine oral liquid bottle
  11. TerryWhite Chemmart dry cough relief oral liquid bottle (4mg/mL of pholcodine)
குறித்த தயாரிப்புகளுக்கான ஐரோப்பிய சந்தைப்படுத்தல் அங்கீகாரங்களை திரும்பப் பெறுவதற்கு, ஐரோப்பிய மருந்துகள் முகமை பரிந்துரைத்ததை அடுத்து, இம்மருந்துகள் தொடர்பில் Therapeutic Goods Administration ஆராயத் தொடங்கியது.

இவ்வாறு திரும்பப்பெறப்பட்ட மருந்துகளும், flu மருந்துகளும் ஒருங்கிணைந்தமுறையில் பயன்படுத்தப்படும்போது ஏற்படக்கூடிய எதிர்வினையுடன் தொடர்புடைய அபாயத்தைக் கண்டறிந்ததையடுத்து, Therapeutic Goods Administration இம்மருந்துகளைத் திரும்பப்பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

அதேநேரம் மயக்க மருந்தில் பயன்படுத்தப்படும் மருந்துடன் இணைந்த எதிர்வினை பற்றிய கவலையும் உள்ளது.

மயக்கத்தின் போது திடீர் ஒவ்வாமை ஏற்படும் ஆபத்தில் இருப்பவர்கள் யார் என்று கணிப்பது கடினம் எனவும், சில நோயாளிகளுக்கு அவர்கள் சமீபத்தில் pholcodine கொண்ட மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தமை பற்றித் தெரிந்திருக்காது எனவும் Therapeutic Goods Administration தலைவர் John Skerritt தெரிவித்தார்.

Therapeutic Goods Administration இதுவரை சந்தேகத்திற்குரிய pholcodine தொடர்பான ஒவ்வாமையால் ஏற்பட்ட எதிர்வினைகள் குறித்து 50 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. இதில் ஒரு மரணமும் அடங்கும்.

நுகர்வோருக்கும் நோயாளிகளுக்கும் என்ன ஆலோசனை வழங்கப்படுகிறது?

வறட்டு இருமலுக்கு சிகிச்சையளிப்பதற்கான பாதுகாப்பான மாற்று வழிகள் குறித்து நுகர்வோர் தங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று பேராசிரியர் John Skerritt கூறினார்.

"உங்களுக்கு மயக்க மருந்து வழங்கப்படவேண்டிய தேவைப்பட்டால் மற்றும் கடந்த 12 மாதங்களில் pholcodine எடுத்துக் கொண்டால், உங்கள் சுகாதார நிபுணரிடம் அதைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்துகிறேன்" என்று அவர் கூறினார்.

"மயக்க மருந்து வழங்கப்படவேண்டிய நோயாளிகள் முந்தைய 12 மாதங்களில் pholcodineனைப் பயன்படுத்தினார்களா என்பதையும் சுகாதார வல்லுநர்கள் சரிபார்க்க வேண்டும்." என அவர் வலியுறுத்தினார்.

மீளப்பெறப்பட்டுள்ள தயாரிப்புகளின் முழுமையான பட்டியலை இந்த இணைப்பில் பார்வையிடலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

Source: AAP

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand