SKIP TO MAIN CONTENT

விடை பெறுகிறது ஹோல்டன் !

ஆஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்றான ஹோல்டன் (Holden) வாகன விற்பனை, வடிவமைப்பு மற்றும் பொறியியல் என்பவற்றை அடுத்த ஆண்டிலிருந்து நிறுத்தப் போவதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜெனரல் மோட்டர்ஸ் (GM - General Motors) அறிவித்துள்ளது.

Media arrive at a Holden event in Melbourne, Sunday, Sept. 13, 2015. Car manufacturer Holden will retain more than 100 design jobs in Australia after General Motors reversed a decision to send them overseas. (AAP Image/Tracey Nearmy) NO ARCHIVING
Workers have been told that operations will be shut down at Holden on October 20. Source: AAP

1 min read

Published

By Kulasegaram Sanchayan


Skip to article content

பல தசாப்தங்களாக இங்கு விற்பனையாகி வந்த Commodore, Astra மற்றும் Barina போன்ற வாகனங்கள் 2021ஆம் ஆண்டு முடிவிற்குள் "ஓய்வு பெறுவதாக" GM அறிவித்தது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் இந்த வாகனங்கள் அதிகமாக விற்கபடாதமையே அதற்கான காரணம் என்று GM வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லியுள்ளது.  இதனால் எத்தனை பேர் வேலை இழப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்படவில்லை.

ஹோல்டன் தனது ஆஸ்திரேலிய உற்பத்தி நடவடிக்கைகளை 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறுத்திக் கொண்ட போது நூற்றுக்கணக்கானவர்கள் வேலை இழந்தார்கள் என்பதும் அதன் பின்னரும் சுமார் 700 ஹோல்டன் ஊழியர்கள் வாகனங்களை வடிவமைக்கும் வேலையை செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

ஹோல்டன் வாகனம் ஆஸ்திரேலியாவில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது குறித்து நாம் வழங்கிய காலத்துளி நிகழ்ச்சியை இந்த இணைப்பில் கேட்கலாம்:


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now