SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் ஹோட்டல் பணியாளருக்கு தொற்றியிருப்பது பிரிட்டனில் பரவியுள்ள புதியரக வைரஸ்!

Victorian Premier Daniel Andrews
Victorian Premier Daniel Andrews Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

மெல்பேர்னில் நேற்றையதினம் மற்றுமொரு ஹோட்டல் பணியாளருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தநிலையில் இவருக்குத் தொற்றியிருப்பது பிரிட்டனில் பரவியுள்ள புதியரக கொரோனா வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து திரும்பிவரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படும் Melbourne Airport, Holiday Inn ஹோட்டலில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கே இத்தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த பணியாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றையதினம் புதிதாக எவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என விக்டோரிய Premier Daniel Andrews தெரிவித்தார்.

அதேநேரம் வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் Premier Daniel Andrews கூறினார்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now