முக்கியமாகக் கவனிக்கத்தக்கவை:
- டார்வின், கன்பரா மற்றும் ஹோபார்ட் மிகப்பெரிய வருடாந்திர விலை ஏற்றத்தைக் கண்டன (குறைந்தது 22 சதவீதம் வரை)
- மெல்பனில் மிகக் குறைந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது (கடந்த ஆண்டை விட 13 சதவீதம் உயர்ந்துள்ளது)
- பிராந்திய இடங்களில் விலை அதிகரிப்பு (22 சதவீதம் வரை), தலை நகரங்களை விட (18 சதவீதம் வரை) அதிகமாக உள்ளது
நாட்டிலுள்ள வீடுகளின் விலை கடந்த மாதம் 1.5 சதவீதம் உயர்ந்துள்ளன
ஹோபார்ட் (+ 2.3 %), கன்பரா (+ 2.2 %) மற்றும் பிரிஸ்பன் (+2 %) ஆகிய தலை நகரங்களிலுள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளின் விலை அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளன.
அடிலெய்ட் (+1.9 %), சிட்னி (+1.8 %) மற்றும் மெல்பன் (+1.2 %) உட்பட மற்ற தலைநகரங்களிலும் விலைகள் உயர்ந்தன. ஆனால் டார்வின் நகரில் மட்டும் வீட்டு விலைகள் கடந்த மாதம் (0.1 %) குறைந்துள்ளன.

Changes in Australia's housing market. Source: CoreLogic
முடக்க நிலையிலும் வீடு வாங்க விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
விற்பனைக்கு விளம்பரப் படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையில் ஆகஸ்ட் மாதத்தில் அதீத வீழ்ச்சி இருந்தபோதிலும் விலைகள் கடுமையாக உயர்ந்தன.
கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், சந்தைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை சராசரியை விட 5.8 சதவீதம் குறைந்ததாக தரவுகள் சொல்கின்றன. இதற்கு நேர்மாறாக, டெல்டா தொற்று பரவ ஆரம்பிக்க முன்னர், தங்கள் வீடுகளை விற்க விரும்பியவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. மே மாத தொடக்கத்தில் சராசரியை விட, விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 19.7 சதவீதம் அதிகம்.

Property for sale Source: Getty Images/fstop123
இந்த வருட ஆரம்பத்திலிருந்து, வீட்டு விலைகள் சராசரியாக 15.8 சதவீதம் உயர்ந்துள்ளன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அவை 18.4 சதவீதம் அதிகமாக இருந்தன - இது கடந்த 32 ஆண்டுகளில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டொலர் கணக்கில் பார்த்தால், நாட்டில் சராசரி வீட்டு விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் $103,400 அதிகரித்துள்ளது. ஒரு வாரத்தில் சுமார் $1,990 அதிகரித்துள்ளது என்று சொல்லலாம்.
புதிதாக ஒருவர் வீடு வாங்குவது கடினமாகிறது
ஒப்பீட்டளவில், மக்கள் பெறும் ஊதியங்கள் 1.7 சதவீத வளார்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. புதிதாக ஒருவர் வீடு வாங்குவது கடினமாகிக் கொண்டே போகிறது என்பதையே இந்தப் போக்கு எமக்கு எடுத்துக் காட்டுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.