COVID-19 சோதனைகள் எவ்வளவு துல்லியமான கணிப்பை தரக்கூடியவை?

An Indian doctor conducts a swab test for corona virus in Guwahati Medical College Hospital (GMCH) in Gauhati, India, Sunday, May 17, 2020.

An Indian doctor conducts a swab test for corona virus in Guwahati Medical College Hospital Source: AAP

Corona virus அல்லது SARS-CoV2 என்ற வைரஸ் ஒருவரது உடலில் புகுந்திருக்கிறதா என்பதை அறிய இரண்டு விதமான சோதனைகள் இருக்கின்றன.

1. உடலில் SARS CoV2 வைரஸ் இருக்கிறதா என்பதை அறிவதற்கு, மூக்கில் இருந்து சுரக்கும் நீர் (snot) தொண்டைப்பகுதியில் எடுக்கப்பட்ட உமிழ் நீர் (saliva/spit)என்பவற்றில் இந்த வைரஸ் உள்ளதா என்று பரிசோதனை செய்தல். இதை RT-PCR test என்று சொல்வார்கள்.

இந்த பரிசோதனையின் போது, SARS CoV2 வைரஸின், genetic material என்று அழைக்கப்படுகின்ற, உட்கரு அமிலம் (nucleic acid) இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும். ஒருவர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகு முன்பே நோயைக்கட்டுப்படுத்த, இந்த சோதனை உதவும். ஆனால் இது சிக்கலான சோதனை; துல்லியமான பெறுபேற்றைப் பெற இது ஆய்வுகூடத்தில் நிபுணர்களால் செய்ப்படவேண்டும்.
university lab, female medical students, Chinese ethnicity, Middle Eastern ethnicity
Two female medical students Chinese and Middle Eastern ethnicity respectably, studying anatomy in university lab using an anatomical model. Source: Getty Images
2 SARS CoV2 என்ற வைரஸை எதிர்க்க, உடலின் நோயெதிர்ப்புச்சக்தி, antibodies என்ற வஸ்துவை உற்பத்தி செய்திருக்கிறதா என்று குருதியின் மாதிரியை(blood sample) எடுத்து கண்டறிதல். இதை serology test என்றும் சொல்வார்கள்.

இந்த antibodies ஒவ்வொரு வைரஸுக்கும் வேறுபடும். இதை, தமிழில் ‘பிற பொருள் எதிரி’ என்று சொல்வோம். இதை ‘எதிர்ப்புரதம்’ என்று குறிப்பிடுவோரும் உண்டு. இதுவும் ஆய்வு கூடத்தில் செய்யப்படேண்டிய சோதனை என்ற போதும், Covid19 தொற்று வேகமாகவும் வியாபித்தும் பரவியதால், test kits என்ற வடிவில் தேவைப்பட்ட இடங்களில் பயன்படுத்தக்கூடிய விதமாக பல நாடுகளில் பல நிறுவனங்கள் இவற்றைத் தயாரிக்கத் தொடங்கின.

இவை rapid tests/point of care tests என்று அழைக்கப்படுகின்றன. இந்த சோதனை health professionals என்ற நலத்துறை அலுவலர்களால் செய்யப்படவேண்டியது.
A nurse tests a patient for COVID-19 at a drive-through Fever Clinic in Caloundra on the Sunshine Coast.
A nurse tests a patient for COVID-19 at a drive-through Fever Clinic in Caloundra on the Sunshine Coast. Source: AAP
இந்த சோதனைகள் எவ்வளவு துல்லியமான கணிப்பை தரக்கூடியவை?

ஒருவருக்கு sore throat தொண்டை நமைச்சல் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவர் Covid 19 பரிசோதனைக்குச் செல்கிறார். பரிசோதனை முடிவு வந்ததும், அவருக்கு Covid 19 தொற்றியிருக்கிறதா இல்லையா என்பது சந்தேகத்திற்கு இடமின்றி முடிவாகவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். அப்படி நடப்பதில்லை. Perfect test என்று ஒன்று இல்லை. பரிசோதனை பற்றிய முடிவை, வைத்தியர் தான் தீர்மானிக்கவேண்டும். பரிசோதனை செய்யப்படும் முறை, நோயாளி பற்றிய, நோய் பற்றிய தகவல்கள் என்பவற்றை வைத்து வைத்தியர், சோதனை பெறுபேற்றை தீர்மானிக்க வேண்டும்.

Antibodies அல்லது உடலின் நோயெதிர்ப்புச்சக்தி உருவாக்கும் பிறபொருளெதிரியைக் கணிக்கும் serology test களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன?

வைரஸ் உடலில் புகுந்து, நோயெதிர்ப்புச்சக்தி அதை அறிந்து, antibodies என்ற பிற பொருள் எதிரி உருவாக சில நாட்களாகும். ஆகவே இதற்குமுன் blood sample எடுக்கும்போது, ‘negative’ வைரஸ் தொற்றவில்லை என்ற false negative ஐ இது தரும். அதே நேரத்தில் மற்றொரு சிக்கல் என்னவென்றால், உடலில் புகும் சாதாரண சளிச்சுரத்தை (flu) ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு எதிராகவும் உடலில் antibodies உருவாகும். இதுவும் பிழையான முடிவுகளைக் கொடுக்கக்கூடும்.
Australians are being urged to exercise caution after reports that dodgy 'home' COVID-19 tests kits are being imported into Australia.
Source: AAP
இதைத்தவிர, ஆஸ்திரேலியாவில் பயன்படுத்துவதற்கென பெறப்பட்ட test kits கள் சரிவர இயங்கவில்லை என்ற செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளதே?

Corona virus சடுதியாக pandemic என்ற கட்டத்தை எட்டியதன் காரணமாக, அதைக் கட்டுப்படுத்தும் சீரிய நோக்கத்தோடும், மறுபுறம் குறுகிய காலத்தில் பெருமளவில் பணம் சம்பாதிக்கும் வர்த்தக நோக்கத்தோடும், பல நிறுவனங்கள் test kits தயாரிப்பில் ஈடுபட்டன. இவற்றின் தரமும் நம்பகத்தன்மையும் சரிவர உறுதிசெய்யப்படாமலேயே, பல நாடுகளும், அமைப்புகளும் இவற்றை போட்டி போட்டுக்கொண்டு வாங்கின.

இதற்கு சந்தையில் பெருமளவில் demand இருந்ததால், சில நாடுகள் தமது செல்வாக்கைப் பயன் படுத்தியும் வேறுசில, மற்றையவர்களைவிட அதிக பணம் கொடுத்தும் இந்த text kits களை வாங்கிக் குவித்துக்கொண்டன. இப்போது, இந்த test kits களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியிருக்கிறது.

அத்தோடு, இதைப்பயன்படுத்துவோருக்குத் தேவையான பயிற்சியின்மை, மற்றும் நாம் ஏற்கனவே பார்த்த sample களில் இருக்க க்கூடிய குறைபாடுகள் என்பனவும் இந்த test kits கள் சரிவர இயங்கவில்லை என்ற முறைப்பாடுகளை தோற்றுவித்திருக்கின்றன.
Australian government 3 steps COVID-safe
Scott Morrison 3 steps announcement Source: SBS
இந்த test kits கள் பற்றிய நமது அரசின் நிலைப்பாடு என்ன?

இங்கு, TGA (Therapeutic Goods Administration) என்ற மருந்துப்பொருட்கள் தொடர்பான நிர்வாக அமைப்பு, ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் எந்தெந்த நிறுவனங்கள் அல்லது விநியோகஸ்தர்கள் விற்பனை செய்யும் சோதனை உபகரணங்கள் அரச அங்கீகாரம் பெற்றவை என்ற விபரம் இருக்கிறது. இவை மட்டுமே இங்கு சட்டப்படி பயன்படுத்தப்பட முடியும் என்ற அறிவித்தலையும் அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் 51 நிறுவனங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மறுபுறம், நாம் self testing என்றமுறையில் சுயமாகப் பரிசோதித்துக்கொள்ள பயன்படுத்தக்கூடிய test kits கள் பற்றிய விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் இடம்பெற்று வருகின்றன. இவை பெரும்பாலும், சீனாவில் தயாரிக்கப் படுபவையாகும். இவைபற்றிய நம்பகத்தன்மை கேள்விக்குரியதே. இந்த self test kits சட்டப்படி அனுமதிக்கப் பட்டவையல்ல என்றும் அரசு அறிவித்திருக்கிறது.


Share

Published

Updated

Presented by R.Sathiyanathan

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand