கொரோனா: நிதிநெருக்கடியை எதிர்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களுக்கான உதவிகள்

Students on university campus

Source: AAP Image/Dean Lewins

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வேலையிழந்து பாதிப்புக்களை எதிர்கொள்வோர் பட்டியலில் வெளிநாட்டு மாணவர்களும் அடங்குகின்றனர்.

இவ்வாறு வேலைவாய்ப்பின்றி அவதிப்படுபவர்கள் தமது வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொள்வதற்கு எந்த வழியும் இல்லாதிருந்தால் அவர்கள் தமது சொந்தநாடுகளுக்குத் திரும்பிச் செல்லலாம் என ஆஸ்திரேலிய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இதுதவிர 12 மாதங்களுக்கு மேல் ஆஸ்திரேலியாவில் உள்ள மாணவர்கள் தமது சூப்பர் அனுவேசன் பணத்தில் 10 ஆயிரம் டொலர்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியாவிலுள்ள பல பல்கலைக்கழகங்கள் தமது பங்கில் மாணவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. இதற்கென சுமார் 110 மில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட நிதியினை பல்கலைக்கழகங்கள் ஒதுக்கியுள்ளன. அதுகுறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Deakin University

அடுத்த 6 மாதங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவவென மேலதிகமாக 25 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள support services  ஊடாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Australian National University

மொத்தமாக சுமார் 21 மில்லியன் டொலர்களை தங்குமிடம், உணவு, மருத்துவம், பயணச்செலவுகள், கற்றல் செலவுகள் போன்றவற்றுக்கென கடந்த மர்ச் மாதம் முதல் ஒதுக்கியுள்ளது.

Monash University

15 மில்லியன் டொலர்கள் பெறுமதியான Student Compassionate and Hardship நிதியுதவித்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

RMIT

10 மில்லியன் டொலர்கள் பெறுமதியான நிதியுதவி Emergency Financial Grant , Technology Grant ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் வழங்கப்படுகின்றன.

Charles Sturt University, Sydney

தகுதிபெறும் மாணவர்களுக்கு 500 டொலர்கள் கொடுப்பனவு ஒருதடவை மாத்திரம் வழங்கப்படும்.

Victoria University

Emergency financial grant, Emergency financial grant, Crisis housing support ஆகிய 3 பிரிவுகளின் கீழ் உதவிகளை வழங்குகிறது.

இவை தவிர

University of Technology Sydney

Edith Cowan University

Curtin University

Australian Catholic University

Macquarie University

Charles Darwin University

Flinders University

Swinburne University of Technology

The University of Newcastle

University of South Australia

University of Western Australia

University of Adelaide

Murdoch University

University of New South Wales

University of Southern Queensland

University of Queensland

University of Tasmania

Western Sydney University

University of Wollongong

University of Sydney

La Trobe University

Griffith University

ஆகிய பல்கலைக்கழகங்களும் பல்வேறுதரப்பட்ட உதவிகளை வழங்குகின்றன. சம்பந்தப்பட்ட மாணவர்கள் தமது பல்கலைக்கழகங்களைத் தொடர்புகொள்ளலாம்.

 

உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirusஎன்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share

Published

Source: SBS Malayalam

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand