2023ல் கோவிட் பரவலை எதிர்த்து போராட ஆஸ்திரேலியா எவ்வாறு திட்டமிட்டுள்ளது?

ஆஸ்திரேலிய அரசு 2023 இல் கோவிட் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு கூடுதலாக $2.8 பில்லியன் முதலீடு செய்கிறது.

ANTHONY ALBANESE CHEMIST VISIT

Prime Minister Anthony Albanese (left) and Minister for Health Mark Butler (second left) visit a chemist store in Kingston in Canberra. (file) Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தும் வைரஸ்களைப் போலவே, கொரோனா வைரஸை நிர்வகிக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் தொடர்ந்து இலவச கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும், எதிர்காலத்தில் சிறந்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

அரசின் தேசிய தகவல்தொடர்பு பிரச்சாரங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் அதேநேரம் புதிய மாறுபாடுகள் மற்றும் எதிர்கால அலைகளை கையாள்வதில் குடியிருப்பாளர்களுக்கு அறிவுரை வழங்குவதோடு கோவிட் சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வையும் அதிகரிக்கும்.

2023 குளிர்கால தயார்நிலை பிரச்சாரம் கொரோனா வைரஸ்இ காய்ச்சல் மற்றும் பிற சுவாச வைரஸ்களை நிர்வகிக்க உதவும்.

கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள்

கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியர்கள் தங்கள் நோயை வீட்டிலேயே நிர்வகிக்கும்வகையில் உதவிக்கு 'Healthdirect Living with COVID service' தேசிய ஹாட்லைனை (1800 020 080) அழைக்கலாம்.

மெடிக்கெயார் உள்ள குடியிருப்பாளர்கள், டெலிஹெல்த் (வீடியோ மற்றும் தொலைபேசி) மற்றும் நேரில் பெற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு மருத்துவ ஆலோசனைகளுக்கான சேவைகளைத் தொடர்ந்து பெறலாம்.
எவ்வாறாயினும், ஆஸ்திரேலிய அரசு மார்ச் 2023 முதல் GP தலைமையிலான சுவாச மருத்துவமனை செயற்பாட்டை நிறுத்தும்.

சுவாசக்குழாய் தொற்று அறிகுறிகளைக் கொண்டவர்களை மதிப்பிடவும், பரிசோதிக்கவும் மற்றும் நிர்வகிக்கவும், அரசு மார்ச் 2020 இல் உள்ளூர் GPகளுடன் இந்த கிளினிக்குகளை நிறுவியது.

தேவைப்படின், அனைத்து சுவாச நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், "தொற்று நோயாளிகள் மற்றும் சுகாதார அமைப்பின் பிற பகுதிகளிலிருந்து வரும் அழுத்தத்தை அகற்றுவதற்கும்" இந்த கிளினிக்குகளை மீண்டும் செயல்படுத்த முடியும் என்று அரசு கூறியது.

கோவிட் பரிசோதனை

அடுத்த 12 மாதங்களில் மற்ற சுவாச நோய்களுடன் கோவிட் பரிசோதனை தேவைகளை சீரமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

"கோவிட்-19 க்கான சோதனை இனி ஒரு கண்காணிப்பு கருவியாக இருக்காது, ஆனால் வைரஸ் தடுப்பு சிகிச்சைகளை விரைவாகப் பெறுவதை உறுதிசெய்ய இது பயன்படுத்தப்படும்" என்று அரசு குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி 1 2023 முதல், ஆஸ்திரேலியர்கள் மெடிகெயார் நிதியுதவியுடனான PCR பரிசோதனைக்கு மருத்துவர் அல்லது செவிலியரிடம் இருந்து பரிந்துரை பெற வேண்டும்.

குறைந்த ஆபத்துள்ள நபர்கள் PCR பரிசோதனை செய்யத் தேவையில்லை அல்லது பரிந்துரைக்கப்படுவதில்லை.

இருப்பினும், அவர்களுக்கு சுவாசம் மற்றும் பிற கோவிட்-19 அறிகுறிகள் இருந்தால், RAT பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்களின் RAT எதிர்மறையாக இருந்தால் மற்றும் அவர்களின் அறிகுறிகள் தொடர்ந்தால் அவர்கள் GP பரிந்துரையை நாட வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டுக்கான ஆஸ்திரேலிய மையத்தை (CDC) நிறுவுதல்

அமெரிக்காவில் CDC போன்று, ஆஸ்திரேலியாவின் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க அரசு உத்தேசித்துள்ளது.

"நோய்க் கட்டுப்பாட்டுக்கான ஆஸ்திரேலிய மையத்தை (CDC) நிறுவுவது, கோவிட்-19 இலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் பயன்படுத்தவும், எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் பிற பொது சுகாதார சவால்களுக்கு ஆஸ்திரேலியாவை தயார்படுத்தவும் உதவும்" என்று அரசு கூறியது.

மனநல ஆதரவு

ஜனவரி 1 முதல் அரச மானியத்துடன் கூடிய உளவியல் sessions எண்ணிக்கை, 20இலிருந்து 10 ஆக மாற்றப்படுகிறது.

முந்தைய Morrison அரசு கோவிட் பரவல் அவசர நிலையின்போது 10 அமர்வுகளை கூடுதலாக அறிமுகப்படுத்தியிருந்தது.

மொத்தம் 20 subsidised psychology sessions என்பது ஒரு தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2021 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் சராசரியாக ஐந்து sessionsஐப் பயன்படுத்தியதாகவும் சுகாதார அமைச்சர் Mark Butler கூறினார்.

Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

By Sahil Makkar
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand