ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஒரு சிறு வணிகம் என்பது 19 பேருக்கும் குறைவானோர் வேலை செய்யும் நிறுவனமாக அல்லது தொழில்முயற்சியாக அடையாளப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான சிறு வணிகங்கள் உரிமையாளர்களால் இயக்கப்படுகின்றன, அவை sole trader-operated என்றும் அறியப்படுகின்றன.
நீங்கள் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்குவது பற்றி திட்டமிடுவதற்கு முன், அதை தொடங்குவதற்கு நீங்கள் தகுதியுள்ளவரா என்பதை கண்டறிய வேண்டும். Bankruptcy எனப்படும் வங்குரோத்து நிலைக்கு உள்ளானவர்கள் அல்லது குறிப்பிட்ட சில குற்றத்திற்காக நீதிமன்றால் தண்டிக்கப்பட்டவர்கள் உட்பட குறிப்பிட்ட பிரிவினர் சொந்தமாக வணிகம் ஒன்றை ஆரம்பிப்பதை ஆஸ்திரேலிய அரசு அனுமதிப்பதில்லை.
புதிதாக வணிகத்தை ஆரம்பிப்பதற்கு நீங்கள் தகுதியானவர் என்பதுடன் என்ன வணிகத்தை ஆரம்பிக்கவிருக்கிறீர்கள் என்ற திட்டம் உங்களிடம் இருந்தால் உங்களது வணிகத்திற்கான பெயரை Australian Securities and Investments Commission (ASIC)இல் பதிவு செய்ய வேண்டும்.

Small business loans are easier to get for established ideas or if you want to open up a franchise. Source: Getty Images
இப்புதிய வணிகத்தில் என்னென்ன சவால்கள் ஏற்படக்கூடும்? எப்படி வாடிக்கையாளர்களைக் கவர்வது? எப்படி வருமானமீட்டுவது போன்ற பல கேள்விகளை புதிதாக வணிகத்தை ஆரம்பிப்பவர் தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஒரு தொழில்முனைவோராக, உங்களது வாடிக்கையாளர்கள் யார் என்பதையும், வணிகத்தை மேம்படுத்த உங்களுக்கு என்ன வகையான ஆதாரங்கள் தேவை என்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு இடத்தை அல்லது அலுவலகத்தை வாடகைக்கு பெறுவது அல்லது பணியாளர்களை பணியமர்த்துவது ஆகியவை இதில் அடங்கும்.
சிறு வணிகத்தை ஆரம்பித்தபோது அது குறித்த தெளிவான திட்டம் தன்னிடம் இருந்தபோதும் அதைச் செயற்படுத்துவதற்கு பல மாதங்கள் ஆனதாக மெல்பனில் ஓராண்டுக்கு முதல் Pot Dispensary ஒன்றை ஆரம்பித்த Alexandra Sinclair சொல்கிறார்.

Source: Getty Images
பெரும்பாலும் சிறு வணிக உரிமையாளர்கள் வணிகத்தைத் தொடங்கும்போது போராடவேண்டியிருக்கிறது. இதற்குக் காரணம் வணிகம் தொடர்பான எல்லா வேலைகளையும் தாங்களே செய்வதற்கு முயற்சி செய்வதாகும்.
இப்படியானவர்களுக்கு அரசு நடாத்தும் ஒரு வருடகால பாடநெறியான New Enterprise Incentive Scheme (NEIS) மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், இதன்மூலம் தனக்கு நிறைய தகவல்களும் ஆதரவும் கிடைத்ததாகவும் Alexandra Sinclair கூறுகிறார்.
ஒவ்வொரு வணிக உரிமையாளரும் கடைபிடிக்க வேண்டிய பல விதிகள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. இவை தொடர்பில் ஒரு சட்டத்தரணியின் உதவியை நாடுவது உதவியாக இருக்கும்.
சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்களில் பெரும்பாலானோர் தங்கள் வணிகத்திற்கு உதவியாக கடன்பெற விரும்புகிறார்கள். ஆனால் வணிகத்தின் குறிப்பிட்ட தேவைகளைப் புரிந்துகொள்ளும்வகையிலான கடன் வழங்குநரைக் கண்டுபிடிப்பது பெரும்பாலும் சிக்கலானதாக இருக்கிறது.

Source: Getty Images
இத்தகைய சிக்கல் காரணமாக, பெரும்பாலான சிறு வணிகங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான தொகையையே கடனாக பெறுகின்றன.
சிறு வணிகக் கடன் மற்ற கடன்களிலிருந்து வேறுபட்டது என்பதுடன் வட்டி விகிதங்கள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.
சிறு வணிகமொன்றைத் தொடங்குவது குறித்த மேலதிக விவரங்களுக்கு:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.