ஆஸ்திரேலியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முதல் அல்லது இரண்டாம் தலைமுறை குடியேற்றவாசிகள் என ஆஸ்திரேலிய புள்ளியியல் திணைக்களம் (ABS) செவ்வாயன்று வெளியிட்ட 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட முடிவுகள் காட்டுகின்றன.
48.2 சதவீத ஆஸ்திரேலியர்களுக்கு வெளிநாட்டில் பிறந்த பெற்றோர் இருக்கின்றனர். மேலும் 27.6 சதவீதமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடொன்றில் பிறந்தவர்கள் ஆவர்.
இதற்கிடையில், வீட்டில் ஆங்கிலம் அல்லாத வேறு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 லட்சத்தால் அதிகரித்து, மொத்தம் 5.5 மில்லியனைத் தாண்டியுள்ளது.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெளிநாட்டிலிருந்து வருகைதந்த சுற்றுலாப்பயணிகள் உட்பட 25,422,788 பேர் கணக்கிடப்பட்டனர்.
1971 மக்கள்தொகை கணக்கெடுப்பில் 12,493,001 பேர் கணக்கிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது.
இதேவேளை நீங்கள் வாழும் பகுதி உட்பட ஆஸ்திரேலியா முழுவதும் எத்தனை தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற விரிவான தகவல்களை பின்வரும் SBS-இன் பிரத்தியேக தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
www.sbs.com.au/news/census-explorer?cid=news:cm:bau:en:nacadigital:census-explorer:na
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
