ஆஸ்திரேலியாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் எவை?

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு டிசம்பர் 2021 இல் ஆஸ்திரேலியா முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட சர்வதேச மாணவர்களுக்கு அதன் கதவுகளை மீண்டும் திறந்தது.

international tudents

Australia welcomes increasing return of international students. Source: Getty Images

அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு சர்வதேச மாணவர்கள் திரும்புவதற்கு வசதியாக சில தளர்வுகளையும் அரசு அறிவித்தது.

ஆஸ்திரேலியாவை உலகெங்கிலும் உள்ள மாணவர்களின் விருப்பத்தெரிவாக மாற்றும்வகையில் அரசின் இச்சலுகைகள் அமைந்துள்ளன.

இதன்படி ஜனவரி 19 முதல் மார்ச் 19 வரையான காலப்பகுதிக்குள், ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் சர்வதேச மாணவர்களின் விசா விண்ணப்பக் கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது.

விசா விண்ணப்ப கட்டணத்தை மீளப்பெறுவதற்கு டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்க முடியும்.
Categories affected by the new law that does not allow international students to change courses in Australia
International students are Australia's largest services export sector. Source: Getty Images
அதேபோன்று மாணவர் விசாவுடன் இங்கு வருபவர்கள் வேலைசெய்ய வேண்டுமெனில், தமது கற்கைநெறி ஆரம்பமாகும்வரை காத்திருக்க வேண்டியிருந்த பின்னணியில் தற்போது இதிலும் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி மாணவர் விசாவுடன் இங்கு வருபவர், தனக்கான கற்கை நெறி ஆரம்பமாவதற்கு முன்னரேயே அவர் வேலைசெய்ய ஆரம்பிக்கலாம்.  

மேலும் மாணவர் விசாவிலுள்ளவர் எத்தனை மணிநேரங்கள் வேலைசெய்யலாம் என்ற கட்டுப்பாட்டையும் ஆஸ்திரேலிய அரசு நீக்கியுள்ளது.

இக்கட்டுப்பாட்டு தளர்வுகள் ஏப்ரல் மாதம் மீளாய்வு செய்யப்படும்.
University representatives hold signs as international students arrive at Sydney Airport in Sydney
Students were among the first to be allowed to enter Australia. Source: AAP
இதேவேளை கொரோனா காலத்திற்கு முன்பு graduate visa subclass  485 ஐப் பெறுவதற்கு பல்கலைக்கழகத்திற்க நேரடியாகச் சென்று கற்றிருப்பது அவசியம். ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு வெளியே மேற்கொள்ளப்படும் online படிப்புகளும் graduate விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது கணக்கில் கொள்ளப்படுகிறது.

 இந்தப்பின்னணியில் கொரோனா பரவலையடுத்து கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச மாணவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால், அரசு அறிவித்துள்ள சலுகைகளுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்களும் தமது கட்டணங்களைக் குறைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் எனவும், மேலும் பல நாடுகளிலிருந்து மாணவர்கள் இங்கு வருவார்கள் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று புலமைப்பரிசில்களை வழங்குவதும் மாணவர்களை தொடர்ந்தும் இங்கு கல்விகற்கத் தூண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Picture of international students waiting for buses at Sydney airport after arriving in Australia,
International students line up for coaches after arriving at Sydney Airport in Sydney, Monday, December 6, 2021. Source: AAP/Bianca De Marchi
மாணவர் விசாவிலுள்ளவர்களுக்கான சலுகைகள் குறித்த மேலதிக விவரங்களுக்கு உள்துறை அமைச்சின் இணையத்தளமான covid19.homeaffairs.gov.au/international-students க்குச் செல்லவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

By Afnan Malik

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand