SKIP TO MAIN CONTENT

நாட்டில் பெருமழை பெய்ய என்ன காரணம்?

கால நிலை மாற்றம் (Climate change) காரணமாக பெருமழையும் அத்துடன் வறட்சியும் பருவகாலங்களில் நிகழாமல் காலம் மாறி நடக்கிறது. ஆனால் கால நிலை மாற்றம் எனும் காரணத்தைத்தவிர வேறு காரணிகளும் அண்மையில் பெய்த பெருமழைக்கும் வெள்ளத்திற்கும் காரணம் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

Flood affected properties.
Source: AAP Image/Supplied by the Department of Defence, Bradley Richardson

4 min read

Published

By R.Sathiyanathan


Skip to article content

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப்பகுதி மற்றும் அதை அண்டிய பிரதேசங்கள் வரலாறு காணாத பெருமழை மற்றும் வெள்ளம்காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் குவீன்ஸ்லாந்து மற்றும் NSW மாநிலங்களில் உயிரச்சேதமும் பல கோடி டாலர்கள் அளவிலான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. நவம்பர் தொடக்கம் மார்ச் வரையான காலப்பகுதியில் பொதுவாக இங்கு மழைக்காலம் என்றபோதும் கடந்த 66 வருடங்களில் இதுபோன்றதொரு தொடர்மழையும் பெருவெள்ளமும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது .

வரலாறு காணாத மழை மற்றும் வரலாறு காணாத வறட்சி என்பன global warming என்ற புவியின் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாகவே நிகழ்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் இதைத்தாண்டியும் மிகப் பிரதானமான காரணம் ஒன்று உண்டு. Trade winds என்று சொல்லப்படுகிற வர்த்தகக் காற்றில் ஏற்படக்கூடிய El Niño மற்றும் La Niña என்ற இரண்டு அசைவுகள் அதாவது oscillation காரணமாகவும் இவ்வாறான மோசமான காலநிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுவே ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் ஏற்பட முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

Trade winds என்று சொல்லப்படுகிற வர்த்தகக் காற்று என்பது, வடகோளத்தில் வடகிழக்காகவும் தென்கோளத்தில் தென்கிழக்காகவும் வேகமாகவும் குறிப்பிட்ட பருவங்களில் வீசும் காற்றுகளாகும். இந்த காற்றின் தடத்திலேயே வணிக பாய்மரக்கப்பல்கள் பயணித்து வர்த்தக மார்க்கத்தை உருவாக்கியதால் இது trade winds அதாவது வர்த்தகக்காற்று என்று அழைக்கப்படுகிறது.

During a La Niña event, the Walker Circulation intensifies with greater convection over the western Pacific and stronger trade winds.
During a La Niña event, the Walker Circulation intensifies with greater convection over the western Pacific and stronger trade winds. Source: Reproduced with the permission of the Bureau of Meteorology

இந்த El Niño மற்றும் La Niña அசைவுகள் சிலவருட இடைவெளியிலும் சிலவேளைகளில் சில வருடங்களுக்கு தொடர்ச்சியாகவும் பசிபிக் சமுத்திரத்தின் tropical என்ற வெப்பம் அதிகமான பகுதிகளில் ஏற்படுவதால் அப்பகுதிகளில் வேளாண்மை, மக்கள் நலம், குடிநீர் விநியோகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் என்பன பாதிக்கப்படுகின்றன.

El Niño மற்றும் La Niña எப்படி ஏற்படுகின்றன என்பது நாம் அறியவேண்டிய ஒன்றே. El Niño மற்றும் La Niña என்பன climate oscillation காலநிலை அசைவுகள் என்று அழைக்கப்படுகின்றன. முதலில் El Niño வைப்பார்க்கும்போது, El Niño அசைவின்போது, காற்று பலவீனமடைவதைத் தொடர்ந்து பசிபிக் சமுத்திரத்திலுள்ள வெப்பமான கடல் நீர் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப்பகுதிக்கு தள்ளப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் சில மாநிலங்களும் கனடாவும் கடும் வறட்சிக்கு உள்ளாகின்றன. அதேவேளையில் அமெரிக்காவின் கிழக்கிலுள்ள மாநிலங்களிலும் தென்கிழக்கு மாநிலங்களிலும் பெருமழையும் பெருவெள்ளமும் ஏற்படுகின்றன. இந்த நிலை ஏற்படும்போது ஆஸ்திரேலியாவிலும் இதே மாதிரியான கடும் வறட்சி ஏற்படுகிறது.

El Niño என்பதற்கு நேரெதிரான காலநிலை La Niña என்றழைக்கப்படும் அசைவின் போது நிகழ்கிறது. அதாவது, La Niña அசைவு நிகழும்போது, ஆஸ்திரேலிய பிராந்தியத்தில் கன மழை, பகல் பொழுதில் குறைவான வெப்பம், இரவில் மிதமான வெப்பம், குறைவான மூடுபனி, சூறாவளி அல்லது கடுவேகமான காற்று, பருவமழை முந்துதல் என்பன நிகழும்.

Flooded Argyle Street at the Camden Bowling Club in Camden in Sydney on Tuesday 8 March 2022.
Flooded Argyle Street at the Camden Bowling Club in Camden in Sydney on Tuesday 8 March 2022. Source: AAP / Dean Lewis

இதன்போது மத்தியரேகையை ஒட்டிய பகுதியில் வீசும் வர்த்தக க்காற்றின் வேகம் உக்கிரமடைகிறது. இதனால் surface currents என்ற மேல் நீரோட்டம் கடலுக்கு அடியில் உள்ள குளிர் நீரை மேலே கொண்டு வருகிறது. இதனால் பசிபிக் சமுத்திர த்தின் மத்திய மற்றும் கிழக்குப் பிரதேசம் குளிரடைகிறது. அதேவேளையில் பசிபிக் சமுத்திரத்தின் மேற்குப்பகுதி வெப்பமடைவதோடு மழைமேகங்களின் உருவாக்கத்திற்கும் மழைவீழ்ச்சிக்கும் இது ஏதுவாகிறது.

இப்படி நடைபெறும் மழை பெரும்பாலும் ஆஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலேயே விழுகிறது. கடுங்காற்று வெப்பமான கடல் நீரை ஆசிய பிராந்தியத்தை நோக்கித் தள்ளுகிறது. இதன் காரணமாக பசிபிக் சமுத்திர நாடுகளில் பெருமழையையும் பெருவெள்ளமும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இந்தோனேஷியா முதல் தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் பெருமழை பெய்யும் சாத்தியம் ஏற்படுகிறது.

இப்படி La Niña அசைவு நிகழும் காலம் இது என்பதாலேயே வரலாறு காணாத பெருமழையும் வெள்ளமும் நம் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த காலநிலை இவ்வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில், அதாவது மாறச் மாத இறுதிவரை தொடர்ந்து நிலவும் சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக World Meteorological Organization மற்றும் Australian Bureau of Meteorology ஆகிய வானிலை ஆய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதே La Niña அசைவு காரணமாக 1955, 1988, 1998 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பிரதேசங்களில் பெருமழை பெய்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

environment, business, politics A climate change sign is seen in Milton, Brisbane, Monday, March 7, 2022. Queensland, federal elections
Climate change is more than a three-year problem an issue that needs planning extending beyond a government's electoral term. Source: AAP

Climate change என்ற காலநிலை மாற்றத்திற்கும் இந்த El Niña மற்றும் La Niña ஆகியவற்றுக்குமிடையே தொடர்பிருக்கிறதா என்பதும் ஆய்வுக்குரியதே. Green house gases என்ற பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தால் climate change என்ற கால நிலை மாற்றம் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார்கள். மனித செயல்பாடுகள் human activities- காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கும் இந்த El Niña மற்றும் La Niña என்பவற்றிற்குமிடையே நேரடித் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்படவில்லை என்றபோதும் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் La Niña நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இதன் காரணமாக extreme weather events எனப்படும் மிகமோசமான காலநிலை நிகழ்வுகள் இப்போது அடிக்கடி நிகழ்வதாகவும் இது மனித குலத்திற்கு பெருஞ்சவாலாக அமைந்து வருவதாகவும் நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த நிலைமைகள் உலக பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிப்பதாக WMO Secretary General Professor Petteri Taalas கூறுகிறார்.

இந்த La Nina அசைவு சில மாதங்களில் ஆஸ்திரேலியாவை நெருங்கவிருப்பதாக Bureau வின் Head on operational climate services Dr. Andrew Watkins கடந்த நவம்பர் மாதமே தெரிவித்திருந்தார். இப்போது ஒரு நல்ல செய்தி என்னவெனில் La Niña ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக Bureau of Meteorology இப்போது சொல்கிறது. ஆனாலும் இயல்பு நிலை மார்ச் மாத இறுதியளவிலேயே ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now