தூக்கத்திலிருந்து விழித்த பின் எவ்வளவு நேரத்தில் ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்த ஆரம்பிக்கிறீர்கள்?

தூக்கத்திலிருந்து விழித்தவுடன் கையடக்கத் தொலைபேசி அல்லது அலைபேசியை பயன்படுத்த ஆரம்பிக்கிறீர்களா? உங்களது மாதாந்த தொலைபேசி கட்டணத்தில், தரவு (data) அதிகமாகப் பயன்படுத்தியதால் கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்களா? Deloitte என்ற நிறுவனம் ஆய்வு செய்து அண்மையில் வெளியிட்ட "2017 Mobile Consumer Survey" என்ற கருத்துக்கணிப்பின் அடிப்படையில், நீங்கள் தனியாக இல்லை. ஸ்மார்ட்போன் எனப்படும் அலைபேசியைப் பயன்படுத்தும் 33 நாடுகளிலுள்ள 53,000 பேரிடம் கேட்ட கருத்துகளின் அடிப்படையில் Deloitte நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளாது. ஆஸ்திரேலியாவிலிருந்து, 8 முதல் 75 வயதிற்குட்பட்ட 2,000 பேர் இந்த ஆய்வில் பங்கு பெற்றனர்.

Use of phone in bed

Source: Creative Commons

கருத்துக் கூறிய ஆஸ்திரேலியர்களில் 43 சதவீதமானோர், அடிக்கடி அல்லது பெரும்பாலான நேரம், தமக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் அலைபேசியில் தரவிறக்கம் மற்றும் தரவேற்றம் செய்வதாகக் கூறியுள்ளார்கள்.

நோர்வே, நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் வாழ்பவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஸ்மார்ட்ஃபோன் எனப்படும் அலைபேசியைப் பயன்படுத்துவதாக இந்த ஆய்வு சொல்கிறது.  88 சதவீதமான ஆஸ்திரேலியர்கள் ஸ்மார்ட்ஃபோன் எனப்படும் அலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள்.

இருப்பினும், ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசி சேவை நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளார்கள். கடந்த நிதியாண்டில், தொலைத்தொடர்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குறைகள் 47 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

ஸ்மார்ட்ஃபோன்கள் என்று வரும்போது, உலகளாவிய ஆய்வின் தரவுகளுடன் ஒப்பிடும் போது, ஆஸ்திரேலியர்கள் வெளிப்படுத்திய கருத்துகளில் முக்கியமானவற்றின் சுருக்கம்:

  1. ஸ்மார்ட்ஃபோன் பாவனையாளார்களில் ஆஸ்திரேலியாவும் முன்னணி வகிக்கிறது.  88 சதவீத ஆஸ்திரேலியர்கள் ஒரு ஸ்மார்ட்ஃபோனின் உரிமையாளர்களாக உள்ளனர்.  வயதில் முதியவர்கள் தான் ஸ்மார்ட்ஃபோனை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
  2. கணினி, தொலைக்காட்சியை விட ஸ்மார்ட்ஃபோன் மூலம் காணொளிகளை ஸ்ட்ரீமிங் செய்து பார்க்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு முதல் மும்மடங்காக உள்ளது.  4G நெட்வேர்க்குகள் மற்றும் அதிக தரவு பெறும் ஒப்பந்தங்கள் நுகர்வோருக்கு வழங்கப்பட்டமை இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.  இருந்தாலும் 43 சதவீதமான ஆஸ்திரேலிய நுகர்வோர் தொடர்ந்து தங்கள் தரவு வரம்புகளைத் தாண்டி, கூடுதல் தரவிறக்கம் செய்வதால், தரவுக்காக வருடத்திற்கு 313 மில்லியன் டொலர்கள் செலவாகிறது.
  3. ஆஸ்திரேலியர்கள் எங்கும் எல்லா இடங்களிலும் மொபைல் தரவுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆஸ்திரேலியர்களில் 35% பேர் காலையில் எழுந்திருக்கும் ஐந்து நிமிடங்களுக்குள் தங்கள் அலைபேசியைப் பார்க்கிறார்கள், 70% பேர் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் உணவுண்ணும் போதே உபயோகிக்கின்றனர்.
  4. இயந்திர கற்றல் ஸ்மர்ஃபோன்களில் சிறப்பாகி வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியர்கள் அதில் இன்னும் அதிக கவனம் செலுத்தவில்லை. சிரி (siri) போன்ற மெய் நிகர் உதவியாளர்கள் குறித்து 43 சதவீதமானவர்களுக்குத் தெரிந்திருந்த போதிலும், 14 சதவீதமானவர்கள் மட்டுமே அதனைப் பயன்படுத்துகிறார்கள்.
  5. ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துவதற்குத் தற்போது, கைரேகை மூலம் அங்கீகாரம் பெறமுடியும்.  2016ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த வருடம், அதன் பயன்பாடு 35 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
  6. மொபைல் கட்டண தொழில்நுட்பங்கள் பெருகியுள்ளன.  அதனால், ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குபவர்கள் தொகை கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது,

வயதின் அடிப்படையில் எத்தனை பேர் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துகிறார்கள்?

Smartphone use by Age
Source: SBS Tamil

எந்த நாட்டவர் எந்த ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துகிறார்கள்?

Smartphone preference by Country
Source: SBS Tamil

பயன்படுத்திய ஸ்மார்ட்ஃபோனை ஆஸ்திரேலியர்கள் என்ன செய்கிறார்கள்?

What do Australians do with their old smartphones?
Source: SBS Tamil

தூக்கத்திலிருந்து விழித்த பின் எவ்வளவு நேரத்தில் ஸ்மார்ட்ஃபோனை ஆஸ்திரேலியர்கள் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்?

Time from waking to reaching the phone
Source: SBS Tamil

 

 

 


2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now