SKIP TO MAIN CONTENT

PETAவின் ஏமாற்று வித்தை!

சில வாரங்களுக்கு முன்பு, Mashable என்ற நிறுவனத்தை PETAவின் பிரச்சார நிறுவனமான Press Kitchen அணுகி ஒரு விசித்திரமான கோரிக்கையை முன்வைத்தது - “பூனை ஒன்று சித்திரவதை செய்யப்படுவதாகக் காட்டும் காணொளியை வெளியிட்டு செய்தியை வெளியிட வேண்டும், அதன் பின்னணியிலுள்ள உண்மைச் செய்தியை அல்ல!”

Man abusing a cat - Fake Video
Man abusing a cat - Fake Video Source: PETA

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

ஒரு சிறிய சாம்பல் நிறப் பூனை, ரூஃபஸ், சமையலறை ஒன்றில் முக்காலி ஒன்றில் அமர்ந்திருக்கிறது.  ஒரு ஆண், உறுதியான குரலில், " ரூஃபஸ் குதி!" என்று கட்டளையிடுகிறார்.  ரூஃபஸ் என்ற பூனை, தான் அமர்ந்திருக்கும் முக்காலிக்கு அருகிலிருக்கும் மற்றொரு முக்காலியை மேலும் கீழும் பார்த்துவிட்டு கண்களை கீழே பார்க்கிறது.  அதன் உரிமையாளர் பெருமூச்சு விடுகிறார்... பூனையிடம் சென்று மீண்டும் கட்டளையிடுகிறார், "குதி, ரூஃபஸ், குதி!!"  அவரது கோரிக்கையை செயலாக்கத் தயங்கும் அந்தப் பூனையின் தலையில் பலமாக அடிக்கிறார்.  இறுதியில் அந்தப் பூனை பாய்கிறது.  அதன் பின், "கேமராவிற்கு, இன்னும் ஒருமுறை குதி!" என்று உரிமையாளர் கோரிக்கை விடுகிறார்.  பயந்து போன பூனை, அங்கிருந்து விரைந்து ஓடுகிறது. 

“விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்” என்று தம்மை அழைக்கும் அமைப்பு - PETA, மேலே விவரித்த பூனையை சித்திரவதை செய்வதாக சித்தரிக்கும் காணொளியை, ஒரு விளம்பர நிறுவனத்தின் உதவியுடன் தயாரித்தது - அஞ்ச வேண்டாம், அது உண்மையான பூனை அல்ல - கணினி உருவாக்கிய அனிமேஷன் பூனை.  இந்தக் காணொளியுடன், Mashable என்ற நிறுவனத்தை PETA அணுகியது. Mashable என்பது, உலகளாவிய பல்-தள ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம்; உலகம் முழுவதிலும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு, தொழில்நுட்பம், டிஜிட்டல் கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  Mashable இந்த காணொளியைப் பிரசுரித்து, அது குறித்து எழுத வேண்டும் என்று கோரிய PETA, அந்தக் காணொளி வைரலாகப் பரவி, இந்தக் காணொளியைப் பார்த்து இணையப் பயனர்கள் சீற்றம் அடைந்த பின்னர், அதன் போலித்தனம் குறித்து அறிவிக்க Mashableற்கு பிரத்தியேக உரிமை வழங்கப்படும் என PETA கூறியுள்ளது.  சிங்கம், புலி போன்ற பெரிய பூனை வகை விலங்குகளும் இந்தக் காணொளியில் காட்டப்படுவது போல் தவறான முறையில் பயிற்றுவிக்கப்படுகின்றன என்ற செய்தியை வெளி உலகுக்கு எடுத்துச் சொல்ல PETA விரும்புவதாகக் கூறியுள்ளது. 

பொய்யான, போலியான செய்தியை வெளியிட்டு மக்களை ஏய்க்க விரும்பாத Mashable , PETA தம்மை அணுகிய முறை குறித்து விரிவாக எழுதி செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now