குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை மனித உடலில் பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.
இந்த தடுப்பூசி விலங்குடலில் சாதகமான பதிலை தந்திருப்பதனால் மனித உடலில் பரிசோதிப்பதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் 120 தொண்டர்கள் மீது இத்தடுப்பூசி அடுத்த 12 மாதங்களுக்கு பரிசோதிக்கப்படும் என்றும் இதன் முதற்கட்ட பெறுபேறு குறித்த அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகளினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி சாதகமான பதிலைத்தரும் என்று தான் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கான சுமார் 130 தடுப்பு மருந்துகள் தற்போது உலகளாவிய ரீதியில் கண்டுபிடிக்கப்பட்டு அவை அனைத்தும் வெவ்வேறு பரிசோதனைக்கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி மனித உடலில் பரிசோதனை செய்யும்வகையில் இவ்வளவு வேகமான பதிலை தந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்ந தடுப்பூசிக்கான ஆய்வுக்கும் முழுமையான கண்டுபிடிப்புக்கும் குயின்ஸ்லாந்து அரசு பல லட்சக்கணக்கான டொலர்களை செலவு செய்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
